1980களில் தமிழகத்தை குலைநடுங்க வைத்த ’ஆறுகொலை’ ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்ட நாள்!
சென்னை: சென்னை திருவான்மியூர் கெளிரிசங்கர்..
இந்த சங்கர் 1980களில் சென்னையில் சட்டவிரோத செயல்களான கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை, பாலியல் தொழிலில் துணைக்கு ஒருவராக கூலிக்கு சேர்ந்தான்..
காலம் மாற.. அத்தனை தொழில்களிலும் கோலோச்சி கொடி கட்டிப் பறந்தான் சங்கர்... சென்னை நகரின் ஒட்டுமொத்த சட்டவிரோத செயல்களிலும் சங்கரே விஸ்வரூபம் காட்டினன்..

அப்போதுதான் கெளரி சங்கர்.. ஆட்டோ சங்கராகிறான்... இவனது அத்தனை தொழில்களுக்கும் அனுசரணையாக, ஆதரவாக துணை நின்றது அன்றைய அரசியல்வாதிகளும் காவல்துறை உயர் அதிகாரிகளும்!
அரசாங்கமே தம் பக்கம் என்பதால் யாரும் அசைக்க முடியாத ஒரு சக்தியாக தெனாவெட்டுடன் சென்னையை கலக்கிக் கொண்டிருந்தான்..
எல்லா தொழில்களைப் போல் இங்கேயும் போட்டி வந்தது.. தொழில் போட்டி, பெண்களை பங்கிடுவதில் போட்டி என இருட்டு பக்கங்கள் உக்கிரமானதாக இருந்தன..
அனைவரும் தம் பக்கம் என்கிற இறுமாப்பில் இருந்த சங்கர் ஆயுதத்தை கையில் எடுத்தான்.. எதிர்க்க நினைத்தவர்களை, துரோகம் செய்ய துணிந்தவர்களை வெட்டிக் கூறு போட்டான்..
இப்படி கொலை செய்த உடல்களை தம் வீட்டு சுவற்றிலேயே புதைத்தும் வைத்தான்... இதை வைத்து 1980களில் எடுக்கப்பட்டசினிமாக்களும் கூட வெள்ளித்திரையில் வெற்றிகொடி நாட்டின.
விதி வலியதாகிப் போனது... சங்கரின் கொலை விவகாரம் ஒன்று போலீசுக்குப் போனது.. போலீசார், அரசியல்வாதிகளின் இருட்டு ஜாதகங்களை வீடியோக்களாக்கி வைத்த ஆட்டோ சங்கருக்கு எதுவுமே எமனாகிப் போனது..
அதுநாள் வரை அவனை நிழல் உலக நாயகனாக கொண்டாடிய அதிகார வர்க்கம் ஆட்டோ சங்கரை சட்டத்தின் முன் குற்றவாளிக்கை தம்மிடம் இருந்து துண்டித்துக் கொண்டது. அவனிடமிருந்த ஆதாரங்களை அள்ளி அழித்துக் கொண்டது.
சங்கருக்கு சிறைவாசம் கிடைத்தது.. நீதிமன்ற விசாரணையில் தூக்கும் கிடைத்தது.. ஒரு கட்டத்தில் சுயசரிதையை நக்கீரன் வார இதழில் எழுதத் தொடங்கினான் சங்கர்.
போலீசும் ஆண்ட அரசும் அலறிப் போய் தடை விதிக்க போராடிப் பார்த்தன. ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஆட்டோ சங்கரின் தொடருக்கு நக்கீரன் கோபால் அனுமதி தீர்ப்பு வாங்கினார்.
அப்போது தமிழக அரசியல் களத்தையே அந்த தொடர்கள் புரட்டிப் போட்டன.. ஏனெனில் ஆட்டோ சங்கரின் கள்ளச் சந்தையில் ஆட்டம் போட்ட கிழட்டு அரசியல்வாதிகளும் காவல்துறை கருப்பு ஆடுகளும் அப்போதும் உயிரோடு இருந்தன..
சிறையில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பி ஓடியதாக பிடிபட்டதாக ஏகப்பட்ட ஜோடிப்புகளுக்கு இடையேதான் இன்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் 1995-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி சேலம் சிறையில் தூக்கிலிடப்பட்டார் 'ஆட்டோ சங்கர்’












Click it and Unblock the Notifications