Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிஸ்ஸாகாது".. அந்த 1000 ரூபாய் எப்போது கிடைக்க போகுது தெரியுமா.. மாதத்தை அறிவித்த திமுக அமைச்சர்

1000 ரூபாய் மகளிருக்கு எப்போது தரப்படும் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் புது தகவல் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசின் முக்கிய வாக்குறுதியான, பெண்களுக்கான 1000 ரூபாய் எப்போது கிடைக்கும்? யாருக்கெல்லாம் இந்த 1000 ரூபாய் கிடைக்கும்? என்ற தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அதுகுறித்த முக்கிய தகவலை நாமக்கல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் சென்றிருந்தார்.. அப்போது அவர் அத்தொகுதி மக்களிடம் பேசும்போது திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

இதே இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தபோது, திமுக அரசின் குறைகளை எல்லாம் லிஸ்ட் போட்டு பேசினால், முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை லிஸ்ட் போட்டு சொன்னார். அப்போது, மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் பேசினார்..

 கண் கண்ணாடி

கண் கண்ணாடி

"கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதுக்குள்ளே, சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம். இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்று இருக்கிறது.. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சி காலத்தில் கஜானாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி நாங்கள் செய்து வருகிறோம்... எப்படியும், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக சொல்கிறேன்... ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று கூறியிருந்தார்.

 1000 ரூபாய்

1000 ரூபாய்

மகளிருக்கான 1000 ரூபாய் எப்போது தரப்படும் என்ற கேள்வி கடந்த ஒன்றரை வருட காலமாகவே எழுந்து வரும்நிலையில், பட்ஜெட்டில் இந்த 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக முதல்வர் ஸ்டாலினே சொல்லியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இந்த வருடமும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நிதித்துறையினர் கடந்த ஜனவரியிலேயே துவங்கிவிட்டனர்.. அது சம்பந்தமான துறை அதிகாரிகளும், பட்ஜெட் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.. அமைச்சரவை கூட்டத்தில் இவைகளை எல்லாம் ஆராய்ந்து இறுதி செய்யப்பட வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ளது..

 ஸ்பீடு பட்ஜெட்

ஸ்பீடு பட்ஜெட்

ஆனால், இந்த நேரத்தில்தான், திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. அமைச்சர்களும் தொகுதிக்கு சென்று அங்கேயே முகாமிட்டு, தேர்தல் வேலைகளை கவனித்திருந்தனர். நேற்று முன்தினம் ரிசல்ட் வந்துவிட்ட நிலையில், நேற்று முதல் பட்ஜெட் பணிகள் வேகம் எடுத்துள்ளது.. எப்படியும் மார்ச் 2வது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.. அப்படியே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானாலும்கூட, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னொரு தகவல் வெளியானது.

 ரூ.1000

ரூ.1000

இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்னொரு புது தகவலை சொல்லி உள்ளார்.. மகளிர் மேம்பாட்டிற்காக நாமக்கல் கவிஞர் பெயரில் கலைஞர் உருவாக்கிய மகளிர் அரசு கலை கல்லூரியில், தமிழ்நாடு அரசு சார்பில் நாமக்கல் கவிஞரின் சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். இதையடுத்து, நாமக்கல்லில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத்திருமண விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்திற்குள் மகளிருக்கான உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார்" என்று கூறியுள்ளார்.

 1000 ரூபாய்

1000 ரூபாய்

கடந்த மாதம் உதயநிதி ஒரு விழாவில் பேசும்போது, பெண்களுக்கான உரிமை தொகை 1000 ரூபாய்க்கு நான் உறுதிமொழி கொடுக்கின்றேன்.. இன்னும் 5 மாதத்தில் 1000 ரூபாய் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.. இப்போது நாமக்கல விழாவில் பேசும்போது 6 மாதத்திற்குள் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.. எப்படியும் அடுத்த 3 மாதத்தில் அதாவது ஜூன் 3ம் தேதி 1000 ரூபாய் கிடைத்துவிடும் என்ற தகவல்கள் கடந்த 2 நாட்களாக பரவிய நிலையில், 6 மாதம் என்று உதயநிதி மாதத்தை அறிவித்துள்ளார்.

 PHAAY PHH

PHAAY PHH

இதனிடையே, 1000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.. PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

 ரேஷன் அட்டைகள்

ரேஷன் அட்டைகள்

இதைதவிர, புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+