Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்னைவிட 38 வயது மூத்த நபரை திருமணம் செய்த பெண்.. இணையத்தை திணறடித்த ஜோடி.. காரணம் என்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்,பெண் திருமணம் என்றாலே வயது ஒரு தடை இல்லை என்பது இயல்பாகிவிட்டது.. ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தாலும், இருவருக்கும் புரிதலும் சம்மதமும் இருந்தால் அது தவறு இல்லை. வயதை விட வாழ்க்கை இலக்கு, மரியாதை, நம்பிக்கை முக்கியம். சமத்துவம் இருந்தாலே எந்த வயது வித்தியாசமும் தடையாகாது,.. அப்படித்தான் தனக்கு பிடித்த நபரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்துள்ளார்.. இந்த செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 மாதங்களுக்கு முன்புகூட, உத்தரப்பிரதேச மாநிலத்தில், மனைவி இறந்த பிறகு தனிமையில் வாழ்ந்த முதியவர் தனது 75 வயதில் தனக்கு துணை தேவை என்று 35 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Massive Age Gap 22 year old woman photo 22 60

சங்குராம் 75 வயது

75 வயது சங்குராம் என்பவருக்கு மனைவியும் இல்லை, குழந்தைகளும் இல்லை.. உறவினர்கள் அனைவரும் டெல்லியில் வசித்து வந்தனர். இதனால் சமையல் செய்து சாப்பிடவும், அத்தியாவசிய பணிகளை கவனிக்கவும், தன்னை கவனித்துக்கொள்ளவும் ஒரு துணை தேவை என்று சங்குராம் கருதினார். இதற்காக திருமணம் செய்ய முடிவு செய்தார்..

ஜலல்பூரைச் சேர்ந்த 35 வயது மன்பாவதி என்ற பெண்ணின் அறிமுகம் அவருக்கு கிடைக்கவும் இருவரும் மனம் விட்டு பேசினார்கள்.. சங்குராமை திருமணம் செய்ய மன்பாவதி சம்மதம் சொன்னார்... உறவினர்களின் எதிர்ப்புக்கு நடுவில் இவர்கள் பதிவு திருமணம் செய்துகொண்டனர். உள்ளூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

முதலிரவு - உடல்நிலை

முதலிரவில் புதுமணத் தம்பதி தங்களது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்று பேசிக்கொண்டனர்... இரவு முழுவதும் எதிர்காலம் குறித்து பேசினார்கள்.. ஆனால் காலையில் திடீரென சங்குராமின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. அந்த கிராமத்தினர் இதனை இயற்கை மரணம் என்றனர், மேலும் சிலர் இதில் சந்தேகம் உள்ளதாக கிளப்பி விட்டனர்.

முதிய வயதில் நடந்த இந்த திருமணம் பெரும் பரபரப்பை அப்போது சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி விட்டது.. இந்நிலையில் மற்றொரு முதிய காதல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...

அமெரிக்க பெண் திருமணம்

அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் பிரைட்டன்.. இவருக்கு 22 வயதாகிறது... இவர் 60 வயது நபரை தற்போது திருமணம் செய்துள்ளார். அதாவது தன்னைவிட 38 வயது மூத்தவரான 60 வயது நபரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.. திருமணம் முடிந்ததுமே அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்துள்ளார்...

அமெரிக்காவில் இதுபோன்ற திருமணங்கள் சகஜம் என்றாலும் இந்த திருமணம் விமர்சனத்தை பெற்றுள்ளது.. காரணம், பணத்திற்காகவே 60 வயது நபரை, இளம் பெண் திருமணம் செய்திருப்பததாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்..

அன்பு - மண வாழ்க்கை

ஆனால் இந்த குற்றச்சாட்டை கல்யாண பெண் மறுத்துள்ளார்,.. என்னை பற்றி வரும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்.. என்னுடைய கணவர் மீது அதீத அன்பு வைத்துள்ளேன்.. அந்த அன்புதான் எங்களை திருமணம் வரை இணைத்துள்ளேன்.. மகிழ்ச்சியுடன் எங்கள் மண வாழ்க்கையை துவக்கி உள்ளோம்.. இந்த திருமணம் பற்றி யார் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்க போவதில்லை. தங்களுக்கு மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமையாதவர்கள், பொறாமையாலும், கடுப்பாலும் இப்படி என்னை பார்த்து கூறுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்...

எனினும் சிலர் இந்த மணமக்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறி வருகிறார்கள்.. இந்த திருமண போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+