சென்னை: சோழிங்கநல்லூர் டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. பதைபதைக்கும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக விளங்கும் ஓஎம்ஆர் சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் உள்ள டெக் மகேந்திரா நிறுவன வளாகத்தில் உள்ள கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரப்பாக்கம் எல்காட் வளாகத்தின் பின்புற பகுதியில் உள்ள கிடங்கு பகுதியில் திடீரென தீப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே கரும்புகை வானத்தை மூடும் அளவுக்கு பரவியதால், அப்பகுதியில் இருந்த ஐடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tech Mahindra Fire Chennai OMR Sholinganallur Fire Accident Chennai IT Corridor Karapakkam Fire Tech Mahindra Chennai fire OMR fire accident today Chennai IT corridor fire Sholinganallur Tech Mahindra fire Karapakkam warehouse fire Chennai ELCOT fire news Chennai fire breaking news IT company fire Chennai Tech Mahindra warehouse blaze Chennai fire rescue operation OMR office evacuation Chennai electrical fire Tamil Nadu fire accident Chennai smoke incident Chennai tech park fire

இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்காட் (ELCOT) சென்னைக்கு பின்புறம் அமைந்துள்ள டெக் மகேந்திரா நிறுவன வளாகத்தில்தான் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ பற்றிய தகவல் வெளியானதிலிருந்து அங்கு இருந்தவர்கள் பலர் அதன் தீவிரத்தைக் கண்டு பயந்து போனதாகக் கூறுகின்றனர். இந்த தீ விபத்தை 15 நிமிடங்களுக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சுமார் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். சமுக வலைத்தளத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

இந்த சம்பவம் நடந்த பகுதி சென்னை ஐடி காரிடாரின் மிக முக்கியமான மையமாக இருப்பதால், பல நிறுவன ஊழியர்கள் அலுவலக வளாகங்களில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெக் மகேந்திரா-வின் எலக்ட்ரிக் குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட இடத்தில் இருக்கும் ஊழியர்கள் வேகமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன?

தற்போது தீ விபத்துக்கான சரியான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மின்கசிவு அல்லது கிடங்கு உள்கட்டமைப்பு கோளாறு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், தீ விபத்து காரணமாக சென்னை ஐடி வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

டெக் மஹிந்திரா விளக்கம்

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

"சென்னை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது உண்மை. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசரகாலக் குழுக்களுடன் இணைந்து உடனடியாக தீயை கட்டுப்படுத்தினோம். அனைத்து ஊழியர்களும், அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்" என்று டெக் மகேந்திரா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சூழலை தொடர்ந்து கண்காணித்து, தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+