முடங்கியது எக்ஸ் வலைதளம்.. புதிய பதிவுகளை பதிவிட முடியாததால் நெட்டிசன்கள் கடும் அவதி
சென்னை: எக்ஸ் சமூக வலைதளம் திடீரென்று முடங்கி உள்ளது. எக்ஸ் வலைதளத்தில் லாக்-இன் செய்ய முடியாத நிலையில் புதிய பதிவுகள் பதிவிட முடியவில்லை. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் உள்ளார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என்று மாற்றினார். இந்நிலையில் தான் இன்று மாலை 6 மணிக்கு நம் நாடு உள்பட பல வெளிநாடுகளில் எக்ஸ் சமூக வலைதளம் முறையாக வேலை செய்யவில்லை. திடீரென்று எக்ஸ் வலைதள பக்கம் முடங்கியது.

அதாவது இன்று மாலை சுமார் 6 மணியளவில் எக்ஸ் வலைதள பக்கத்தை லாக்- இன் செய்ய முடியவில்லை. லாக் இன் செய்தவர்களால் எக்ஸ் பக்கத்தில் உள்ள பதிவுகளை Refresh செய்து பார்க்க முடியவில்லை. அதேபோல் புதிய பதிவுகளையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட முடியவில்லை.
புதிய பதிவுகளை பார்க்கலாம் என்று லோட் செய்தால் Something went wrong, Try reloading என்று வருகிறது. இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் எனும் வலைதளத்தில் மொத்தம் 2,100 புகார்கள் பதிவாகி உள்ளது. அதாவது எக்ஸ் வலைதளத்தில் பயனர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை. இந்த பிரச்சனை செல்போன் மட்டுமின்றி டெஸ்க்டாப்பிலும் எதிரொலித்தது. இதனால் நெட்டிசன்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனை பற்றி இன்னும் எக்ஸ் வலைதள பக்கத்தின் நிறுவனம் எந்த விளக்கத்தையும் தரவில்லை. எக்ஸ் வலைதள பக்கம் முடங்கி உள்ளதை நெட்டிசன்கள் தங்களின் பிற வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினருக்கும் எக்ஸ் வலைதள பக்கம் வழக்கம்போல் பிரச்சனைகள் இன்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எக்ஸ் வலைதள பக்கம் இப்படி பிரச்சனையை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை இதுபோன்ற பிரச்சனைகள் வந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நேற்று கூட சிலருக்கு டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு அது சரியானது. இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக எக்ஸ் வலைதள பக்கம் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications