SIR: ஒரே வீட்டில் 3 பேர் பெயர் நீக்கம்.. ஒருவர் பெயர் இருக்கிறது! திட்டமிட்டே வாக்குரிமை பறிப்பா?
சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முடிந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், உயிருடன் இருப்பவர்கள் மற்றும் அனைத்து ஆவணங்களை சரியாக சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் கூட இடம்பெறாமல் போனதாக பல புகார்கள் எழுந்துள்ளன. இதனால், "அரசாங்கமே திட்டமிட்டு குடிமக்களின் வாக்குரிமையை பறித்திருக்கிறது" என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பிரபல ஊடகவியலாளர் லட்சுமி சுப்பிரமணியன்.
பிரபல ஊடகவியலாளர் லட்சுமி சுப்ரமணியன் (@lakhinathan) தனது குடும்பத்தில் நான்கு வாக்குகளில் ஒன்று மட்டுமே வரைவு பட்டியலில் உள்ளதாகவும், மற்ற மூன்று பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: "ஒரு குடும்பத்தில் நான்கு வாக்குகளில் ஒன்று மட்டுமே வரைவு பட்டியலில் உள்ளது, மற்ற மூன்றும் இல்லை. இதுதான் உங்கள் S.I.R ஆ sir?" "உயிரோடு இருந்தும், எல்லா ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்கப்பட்ட போதும் பல வாக்குகள் இந்த வரைவுப் பட்டியலில் இல்லை. ஒரு அரசாங்கமே தங்கள் குடிமக்களின் வாக்குரிமையை திட்டமிட்டே பறித்திருக்கிறது என்று ஏன் சொல்லக்கூடாது?" இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவு பலரிடம் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி போன்ற பலரும், உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மாநில அளவில் நிலைமை:
- தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன (மொத்த வாக்காளர்களில் 15.18%).
- சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம்.
- காரணங்கள்: இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரி கண்டறியப்படாதவர்கள் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள் (திமுக, காங்கிரஸ் உள்ளிட்டவை) இதை "குறி வைத்து செய்யப்பட்ட நீக்கம்" எனக் குற்றம்சாட்டுகின்றன. சிறுபான்மையினர் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பெயர்கள் அதிகம் நீக்கப்பட்டதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை பாதிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

பெயர் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?
- டிசம்பர் 19 முதல் ஜனவரி 18, 2026 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
- படிவம் 6 (புதிய சேர்க்கை), படிவம் 8 (திருத்தம்) ஆகியவற்றை ஆன்லைனில் (https://elections.tn.gov.in அல்லது voters.eci.gov.in) அல்லது உள்ளூர் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்க: https://elections.tn.gov.in அல்லது Voter Helpline App பயன்படுத்தவும்.
தேர்தல் ஆணையம் இதை "பட்டியலை தூய்மைப்படுத்தும் பணி" என விளக்குகிறது. ஆனால், உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளதால், பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். உங்கள் வாக்குரிமையை பாதுகாக்க உடனடியாக சரிபார்த்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications