"சம்மட்டி அடி".. எடப்பாடிக்கு பவர் எகிறுதே.. "தூக்குங்க" அவரை.. ஒரே வார்த்தையை அழுத்தி சொன்ன சசிகலா
ஓபிஎஸ் விரைவில் சசிகலாவையும், தினகரனையும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான சூழல்கள் மெல்ல மெல்ல உயர்ந்துவரும்நிலையில், கையை பிசைந்து நின்றுகொண்டுள்ளார் ஓபிஎஸ்.. அதுபோலவே, டிடிவி தினகரனும், சசிகலாவும் குழம்பி உள்ளதாக கூறப்படுகிறது.
நாளுக்குநாள், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தரும் முக்கியத்துவத்தையும், ஆதரவையும் பார்த்து, ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா என 3 தரப்புமே கடுமையான அதிருப்தியிலும் உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடிக்கு நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்து சேர்ந்துள்ளது.. எனவே ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் கடைசி சான்ஸ் தேர்தல் ஆணையம் ஒன்று மட்டும் தான் என்று தெரிகிறது.

கூடாரம் அசையுதே
ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், ஓபிஎஸ் அரசியல் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்... சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டாலும், அது எந்த அளவுக்கு சாதகமாக முடிவை ஓபிஎஸ்ஸுக்கு பெற்றுத்தரும் என்று உறுதியாக தெரியவில்லை.. இதனிடையே, ஓபிஎஸ் கூடாரமும் மெல்ல மெல்ல கலைய துவங்கி உள்ளது.. எடப்பாடி தரப்பில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு வலை விரிக்கப்பட்டு வருகிறதாம்.

இரண்டில் ஒன்று
அதாவது, "ஓபிஎஸ்சுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை. அவர் பாஜகவில் சேர வேண்டும் அல்லது தனிக் கட்சி துவங்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தாலும் அது சூசைட்டுக்கு சமம்... அவருக்கே எதிர்காலம் இல்லாதபோது, உங்களுக்கும் இருக்காது. அதனால், மறுபடியும் நம்ம கட்சிக்குள் வந்து விடுங்கள். எடப்பாடியிடம் பேசி உங்களுக்கான முக்கியத்துவத்தை கிடைக்கச் செய்கிறோம். இப்போதே முடிவு எடுத்தால் அது உங்களுக்கு நல்லது. இனியும் ஓபிஎஸ்சை நம்பி ஏமாறாதீர்கள்" என்று பேசி வருகின்றனர். எடப்பாடி உத்தரவின் பேரிலேயே இந்த முயற்சியை அவரது மா.செ.க்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

சோர்ஸ் காணோமே
இதையெல்லாம் கேள்விப்பட்டு நொந்து போயுள்ளாராம் ஓபிஎஸ்.. தீர்ப்பு வந்ததையடுத்து, சசிகலாவிடமும் தினகரனிடமும் பேசினாராம் ஓபிஎஸ்.. அப்போது சசிகலா ஓபிஎஸ்ஸிடம், "டெல்லியிலும் நீதிமன்ற வளாகத்திலும் அசைக்க முடியாத லாபியை பழனிச்சாமி (எடப்பாடி) வைத்திருக்கிறார். உங்களால் ஏன் அப்படி ஒரு லாபியை வைக்க முடியவில்லை? உங்களிடம் நான் பேசும்போதெல்லாம், 'பாஜக தலைவர்களிடம் நினைத்த நேரத்தில் பேசுவதற்கு நல்ல சோர்ஸை வைத்திருக்கிறேன். பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவைத்தான் (ஓபிஎஸ்சுக்கு சாதகமானவை ) சுப்ரீம் கோர்ட் உறுதி செய்யும்ன்னு சொன்னீங்க.. ஆனால், உங்க நம்பிக்கை தப்பாபோய்டுச்சே, உங்களுக்கு சரியான சோர்ஸ் இல்லையா?" என்று கேட்டுள்ளார் சசிகலா.

கைவிட்டுட்டாங்களே
அதற்கு, ஓபிஎஸ், "பாஜக தலைமையை ரொம்பவும் நம்பினேன். கைவிட்டுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டுள்ளார். தினகரனிடம் பேசியபோதும் இதே ரீதியிலேயே ஓபிஎஸ் பேச்சு இருந்ததாம்.. இந்த சூழலில்தான், ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கையும், தெம்பையும் ஏற்படுத்தும் விதமாக, நேற்று ஒரே நாளில் தினகரனும், சசிகலாவும் பேசியிருந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேடவாக்கத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சசிகலா பேசும்போது, பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போதும், சில வரிகளை திரும்ப திரும்ப அழுத்தமாக வலியுறுத்தி சொன்னார்..

வெயிட் & சீ
சசிகலா பேசும்போது, ஒருங்கிணைந்த அதிமுக, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, மகத்தான வெற்றியை மக்கள் ஆதரவோடு பெறும். இந்த இலக்கை நோக்கியே நம்முடைய பயணம். இதைதான் நம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையோடு இருங்கள். இதை கண்டிப்பாக நான் செய்து காட்டுவேன். அதுவரை ஓயமாட்டேன். தனி நபர் யாருமே முடிவெடுக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை அடிமட்ட தொண்டர்களின் முடிவு தான் இறுதி முடிவு. அதனால் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு கிடையாது என்று சசிகலா கூறியிருக்கிறார்.

தவ்வுகிறாரே
அதேபோல, அமமுக சார்பில் தேனியில் நடந்த விழாவில் தினகரன் பேசும்போதும், கருணாநிதிக்கு எதிராகவே அதிமுக தொடங்கப்பட்டது. ஆனால் இன்று, டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தான் பழனிசாமி அரசியல் செய்து வருகிறார். இதனால் தான் திமுக வென்று ஆட்சியில் அமர்ந்துவிட்டது.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பையடுத்து வானத்திற்கும், பூமிக்கும் பழனிசாமி குதிக்கிறார். இது அவருக்கு கிடைத்த தற்காலிக வெற்றி தான். துரோகம் இழைத்தோர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

ஒரே ஒரு சொல்
என்னுடைய பெயரை கூட உச்சரிக்க தெரியாமல் எனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பழனிசாமி, அதிமுகவில் இன்று என்னை சேர்க்க மாட்டேன் என்று சொல்லி வருகிறார்.. ஒரு கட்சியை நடத்தி வரும் நான் எதற்கு அங்கு செல்லப்போகிறேன்? எடப்பாடிக்குப் போட்டியே திமுக இல்லை. நானும் ஓ பன்னீர்செல்வமும் தான் போட்டி என்றார்.. அதாவது, தீர்ப்பு வந்த நாளே, தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, பழைய நண்பர் ஓபிஎஸ் என்ற வார்த்தையை சொல்லி, ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.. இப்போது தேனியில் பேசும்போது, நானும் ஓபிஎஸ்ஸூம்தான், எடப்பாடிக்கு போட்டி என்று சொல்லி, தோஸ்து சேர்த்துள்ளார் டிடிவி தினகரன்.

ஒரே புள்ளிகள்
தொடர் சரிவில் உள்ள ஓபிஎஸ்ஸூக்கு, தினகரன், சசிகலா இருவரின் பேச்சும் மிகுந்த நம்பிக்கையையும் தெம்பையும் தந்து வருகிறதாம்.. அந்தவகையில், இவர்கள் 3 பேரும் விரைவில் சந்திக்க போவதாக செய்திகள் கூறுகின்றன.. நேற்றைய தினமே, அதாவது ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிலேயே இவர்கள் சந்திப்பதாக கூறப்பட்ட நிலையில், ஓபிஎஸ்ஸின் அம்மா பழனியம்மாள் திடீரென காலமானார்.. பழனியம்மாள் மறைவுக்கு, சசிகலா, தினகரன் இருவருமே இரங்கல் தெரிவித்திருப்பதை இங்கே குறிப்பிட வேண்டி உள்ளது.. எனினும், எப்படி இருந்தாலும், விரைவில் இவர்கள் சந்திப்பு நடக்க உள்ளதால், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் எதிர்பார்ப்புகள் கூடிவருகின்றன.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications