தமிழர்களின் இல்லங்களில் வளம், மகிழ்ச்சி, வெற்றி நிலைக்கட்டும் - விஜய் தைப்பூசத் திருவிழா வாழ்த்து
சென்னை: தை மாதத்தின் முக்கிய நிகழ்வு தைப்பூசம். தமிழ்க் கடவுள் முருகனை கொண்டாடும் நிக்ழவாகவே தைப்பூசம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் தை மாதத்தின் பூசம் நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தமிழ்க்கடவுள் முருகனுக்கு இந்த தைப்பூசம் நிகழ்வு முக்கியமானதாகும். தை மாத அறுவடைக்கு பிறகு, விவசாயிகள் தங்கள் உற்பத்தியில் குறிப்பிட்ட பகுதியை முருகனுக்கு படைப்பார்கள். இந்த நிகழ்வு அனைத்து முருகன் மற்றும் சிவன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமி மலை, திருத்தணி, பழுமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் தைப்பூசம் விசேஷமாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகள் உள்ளிட்ட முக்கிய முருகன் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் பாதை யாத்திரையாக சென்று முருகனை வழிபடுவார்கள்.
தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருளால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களில் வளம், மகிழ்ச்சி, வெற்றி நிலைக்க வாழ்த்தி, இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications