மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்.. உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டிய நிலையில் ஆக்ஷன்
சென்னை: மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பொது ஊழியருக்கான விதிகளை மீறி செயல்பட்டதாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டி டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்திருந்தார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, போலீஸ் ஜீப் இல்லாமல் சீருடையுடன் சாலையில் நடந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது தொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், கள்ள மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் தன் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக டிஎஸ்பி சுந்தரேசன் புகார் கூறியிருந்தார். இதற்கிடையே, டிஎஸ்பி சுந்தரேசன் மீது பல்வேறு புகார்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு விளக்கம் அளித்த சுந்தரேசன், "தன் மீது ஆதாரமற்ற புகார்களுக்கு கூறப்படுகிறது. தனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால், அப்போதே என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை transfer செய்கிறார்கள்.
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைப் பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம். இதுதான் காவலர்களின் நிலை. Powered By ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. எனது ஒன்பது ஊதிய உயர்வை தடுக்கின்றனர். நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்சினைகளை சந்தித்துள்ளேன். போலீசார் நேர்மையான அதிகாரிகளை விட மாட்டார்கள். குற்றச்சாட்டுகளை வைக்கத் தான் செய்வார்கள்.
நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்ற கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்சனையில் விசாரிக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பொது ஊழியருக்கான விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி சுந்தரேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தஞ்சை சரக டிஐஜி ஜியா உல் ஹக் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications