மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்.. யாருக்கு எப்போது கவுன்சிலிங்? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் நீட் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களை நிரப்பக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதற்கான தரவரிசை பட்டியலைக் கடந்த 24ஆம் தேதி அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என தனித்தனியாக மூன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதேபோல 7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவினர் மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து வரும் ஜன. 30 முதல் பொதுப்பிரிவினருக்குக் கலந்தாய்வு தொடங்க உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் தரவரிசை பட்டியலை www.tnmedicalselection.net, www.tnhealth.tn.go.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஐ. சிவா என்பவர் 514 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரின் எஸ்.பிரகாஷ்ராஜ் (512 மதிப்பெண்கள்), தருமபுரி சி.சந்தானம் (483 மதிப்பெண்கள்) அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications