தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கட்டணம் அதிரடியாக உயர்வு
சென்னை: தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கான கட்டணங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. எந்த படிப்புக்கு எவ்வளவு கட்டணம் என்பதை இப்போது பார்ப்போம்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட பல்வேறு மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவரக்ள் எளிதாக விரும்பும் அரசு கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இடம் பெற முடியும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சிய இடங்கள் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தைச் சேந்தவர்களை வைத்து நிரப்பி கொள்ளலாம்.
அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்பதால் அந்த இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் நிரப்பி கொள்ளும்.
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) ஒவ்வொரு ஆண்டும் நடத்தும். இதற்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன்படி 2023-24 கல்வி ஆண்டு நீட் தேர்வில் வென்ற மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 28ம்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஆவலோடு விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒரு பக்கம் நடத்தப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேருபவர்களுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளை விட அரசு கல்லூரியில் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13 ஆயிரத்து 610-ம், பி.டி.எஸ். படிப்பில் சேர ரூ.11 ஆயிரத்து 610-ம் கட்டணமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 73-ம், பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 73-ம், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு முதல் தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் ரூ.53 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இந்த கல்லூரி கட்டணமும் குறைந்தது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ஓராண்டுக்கு கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ரூ.13 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டைவிட ரூ.1 லட்சம் அதிகமாக உயர்த்தி, ரூ.24 லட்சத்து 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக கூறிய அதிகாரிகள், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!











Click it and Unblock the Notifications