ம.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்: துணை மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது இவர்கள்தான்

தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கான துணை மேயர், நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் பட்டியலை ம.தி.மு.க வெளியிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்புற உள்ளாட்சி மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கான துணை மேயர், நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் பட்டியலை ம.தி.மு.க வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர். குறிப்பாக 21 மாநகராட்சிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் விவகாரம் தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தி.மு.க மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் இந்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு வேண்டிய இடங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

MDMK candidates list: They are the candidates for the post of Deputy Mayor and Munisipality president

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்த நிலையில் தி.மு.க சார்பில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பெயர் பட்டியலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க சார்பில் துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்:

மாநகராட்சி துணை மேயர்

திருவள்ளுர் மாவட்டம் - ஆவடி - எஸ்.சூரியகுமார்

நகராட்சித் தலைவர்

செங்கல்பட்டு மாவட்டம் - மாங்காடு - சுமதி முருகன்

நகராட்சி துணைத் தலைவர்

1.இராமநாதபுரம் மாவட்டம் - பரமக்குடி - கே.ஏ.எம்.குணா (எ) குணசேகரன்

2.தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி - ஆர்.எஸ்.இரமேஷ்

3.கரூர் மாவட்டம் - குளித்தலை - கே.கணேசன்

பேரூராட்சி தலைவர்

1.தென்காசி மாவட்டம் -திருவேங்கடம் - த. பாலமுருகன்

2.தஞ்சாவூர் மாவட்டம் - ஆடுதுறை - இரா. சரவணன்

3.ஈரோடு மாவட்டம் - சென்னசமுத்திரம் - கு. பத்மா

21 மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர் பட்டியலை வெளியிட்டது திமுக!

பேரூராட்சி துணைத் தலைவர்

1.திண்டுக்கல் மாவட்டம் - பாளையம் - வி.லதா

2.ஈரோடு மாவட்டம் - அவல்பூந்துறை - லோ.சோமசுந்தரம்

3.ஈரோடு மாவட்டம் - அரச்சலூர் - ச.துளசிமணி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+