அண்ணாமலைக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்.. சீரியசாகி பிரஸ் மீட்டையே முடித்த வைகோ!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என சென்னை பத்திரிகையாளர்களிடம் காட்டமாக தெரிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மதிமுக தொடங்க உயிர்த் தியாகம் செய்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடி மழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் அக்கட்சி சார்பாக அக்டோபர் 10-ந் தேதி சூளுரை நாள் கடைபிடிக்கப்படுகிறது. திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அதைக் கண்டித்து தீக்குளித்த உயிரிழந்தவர்கள் இவர்கள்.

சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் வைகோ தலைமையில் உயிர் தியாகம் செய்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் "தமிழ்த் திருநாட்டின் உயர்வுக்காகவும், தமிழர்களின் மேன்மைக்காகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபடும் என்ற சூளுரை ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வடசென்னை கிழக்கு சு.ஜீவன், தென் சென்னை கிழக்கு கே. கழகக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி பிரச்சனை: இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு கர்நாடகா அரசை வலியுறுத்தவே செய்கிறது. மத்திய அரசுக்கு எந்த வித உத்தில் அழுத்தம் தர முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம். நானும் துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றோம். தமிழ்நாட்டு எம்.பிக்கள் அனைவரும் சென்றோம். மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் அதே நேரத்தில் உச்சநீதிமன்றமும் காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழ்நாட்டுக்கு காவிர் நீர் தர வேண்டும் என்றது. ஆனால் கர்நாடகா அரசு பொருட்டாக மதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே பொருட்டாக கருதாமல் உதாசீனம் செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்கிறது கர்நாடகா. மூன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி காய்ந்து கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தல் பணிகள்: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறோம். பொதுக்குழுவுக்குப் பின்னர் மாவட்ட வாரியாக வாக்குச் சாவடி முகவர்கள் தேர்வுக்கான கூட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை. எங்கள் எண்ணம் என்ன என்பதை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க முடியாது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம்: 5 மாநில சட்டசபை தேர்தல் என்பது லோக்சபா தேர்தலுக்கு ஒருவகையில் முன்னோட்டமாக இருக்கும். இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது. நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறும. இவ்வாறு வைகோ கூறினார்.
அண்ணாமலைக்கு பதில் இல்லை: அப்போது, திமுக கூட்டணி மீதான தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தை மேற்கோள்காட்டி பத்திரிகையாளர் ஒருவர் வைகோவிடம் கேள்வி கேட்டார். இதற்கு சட்டென, அண்ணாமலைக்கு எல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என சீரியசாகவே முகம் மாறிய நிலையில் பிரஸ் மீட்டையே முடித்துக் கொண்டார் வைகோ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications