வெற்று அறிவிப்புகளின் குவியல்... பட்ஜெட் குறித்து வைகோ கருத்து
சென்னை: உயர்வகுப்பினரின் வாக்கை பெற பொருளாதார இட ஒதுக்கீடு செய்யப்பட்டது தாங்க முடியாத ஒன்று என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக தோழமை கட்சிகளின் பொது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய வைகோ, பொருளாதார இட ஒதுக்கீடு தாங்க முடியாத ஒன்று என்றும், உயர்வகுப்பினரின் வாக்கை பெறுவதற்காகவே 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியைத் தக்க வைக்க வெளியிட்டுள்ள வெற்று அறிவிப்புகளின் குவியல் என்றும் வைகோ விமர்சனம் செய்தார்.
மேலும், மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு, சென்னை தூத்துக்குடி சரக்கு தொடர் வண்டிப் பாதை போன்ற எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களுக்கு அறிவிப்பு கூட இல்லை எனவும் தெரிவித்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications