மதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல்.. உள்ளே புகுந்த மர்ம நபர் கற்களை வீசி தாக்குதல்.. பரபரப்பு
சென்னை: சென்னையில் உள்ள மதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது தமிழகத்தில் உள்ள முக்கியமான கட்சிகளின் ஒன்று மதிமுக.. வைகோ தலைமையில் இயங்கும் மதிமுகவின் தலைமை அலுவலகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. மதிமுக தலைமை அலுவலகத்தில் தினசரி தொண்டர்கள் வருகை இருந்து கொண்டே தான் இருக்கும்.

இதற்கிடையே சென்னையில் உள்ள மதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பாக மதிமுக சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மாலை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கல் வீசி தாக்குதல் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் தலைமை அலுவலகம் உள்ளே சென்ற மர்ம நபர், கல் வீசி தாக்குதல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அலுவலகம் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், அலுவலகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து அழைத்து சென்றனர். கையில் கட்டையை எடுத்து கொண்டு மதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்த அந்த நபர் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து சேதப்படுத்தி உள்ளார்.
மேலும், தான் அணிந்து வந்த ஆடையையும் அவிழ்த்த அந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கியும் ஆபாசமாக பேசி உள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications