துரை வைகோவுக்கு கிடைக்கும் பதவி.. ரகசியமாக அறிந்த ஸ்டாலின்.. செந்தில் பாலாஜி மூலம் ட்விஸ்ட்!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் போது, திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மதிமுக விலகி செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் பதவிக்காக துரை வைகோ காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில், மல்லை சத்யா - வைகோ இடையிலான பிரச்சனைக்கும் திமுகவே மறைமுக காரணமாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரி வருகின்றனர். அந்த வகையில் மதிமுகவும் மீண்டும் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

மல்லை சத்யா பஞ்சாயத்து
இதனால் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று துரை வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். இதனிடையே மதிமுகவில் வைகோ மற்றும் மல்லை சத்யா இடையிலான மோதல், அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மதிமுக நிர்வாகிகள் உடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோ, மல்லை சத்யாவை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
துரை வைகோ பேச்சுவார்த்தை
அதுமட்டுமல்லாமல் மதிமுகவில் இருந்து விலகிய நிர்வாகிகளுடன் மல்லை சத்யா தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். அது மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகளை தான் குறிப்பிடுவதாக பார்க்கப்பட்டது. இதனிடையே துரை வைகோ தரப்பில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
எல்.முருகன் சொன்ன வார்த்தை
இதனை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிதான் என்றும் சூசகமாக தெரிவித்தார். இதன் மூலமாக துரை வைகோ மத்திய அமைச்சராக வேண்டும் என்பதற்காக காய்களை நகர்த்தி வருவதாக பார்க்கப்பட்டது.
ஸ்டாலின் கொடுத்த ட்விஸ்ட்
இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்பின் மதிமுகவில் இருந்த முத்து ரத்தினம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதுமட்டுமல்லாமல் இன்னும் சில மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த 8 ஆண்டுகளாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் யாரும் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்க்கப்படவில்லை.
செந்தில் பாலாஜியின் செயல்
தற்போது ஸ்டாலின் முன்னிலையில் சேர்க்கப்பட்டதன் மூலமாக மதிமுகவுக்கு மறைமுக எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. இந்த நிர்வாகிகளை செந்தில் பாலாஜி மூலமாக திமுக சேர்த்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மதிமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு செல்ல மல்லை சத்யாவின் கார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
விரும்பாத துரை வைகோ?
திமுகவின் இந்த நடவடிக்கை காரணமாக அண்மையில் அண்ணா அறிவாலயம் வந்து முதல்வர் ஸ்டாலினை வைகோ சந்தித்திருந்தார். அதன்பின் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று வைகோ பேசி வந்தாலும், துரை வைகோ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்தல் நெருங்கும் போது, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications