மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான்.. கொரோனாவை ஒழிக்க முடியும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: மக்களிடையே கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகத்தின் செயல்பாடு முக்கியமானது என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைவரும் சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் வரும மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து அனைத்து ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இருப்பினும், மக்களிடையே கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு ஊடகங்களிடம் உள்ளது.
எனவே, மக்களின் உயிர் காக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் முழு செய்திகளை, மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், முன்களப் பணியாளர்களாக இருக்கும் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமானது.
அரசுக்கு ஊடகவியலாளர்கள் ஆக்கப்பூர்வமான நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் கொரோனாவை ஒழிக்க முடியும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications