வந்தாச்சு அறிவிப்பு.. திறந்தாச்சு மெடிக்கல் காலேஜ்கள்.. "ஹாஸ்டல்கள்?".. ஸ்டாலின் அறிவிப்பாரா?

தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.. கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் கிளாஸ்கள் தொடங்கிய நிலையில் மருத்துவ கல்லூரிகளும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.. கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான விடுதிகளும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Recommended Video

    #Breaking தமிழகத்தில் 6 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரி!

    கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து தமிழக அரசு மக்களை காத்து வருகிறது.. அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது... தடுப்பூசிகளை பரவலாக்கி வருகிறது.. தொற்றை குறைக்கும் முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது..

    கட்டுப்பாடுகளையும் அதையொட்டிய தளர்வுகளையும் அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

     தொற்று பாதிப்பு

    தொற்று பாதிப்பு

    அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் இந்த தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது... இப்படிப்பட்ட சூழலில்தான், கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்த நிலையில், ஒருசில பள்ளி, கல்லூரிகள் திறக்க பரிசீலிக்கப்பட்டது.. அதில் மருத்துவ கல்லூரிகளை திறக்க முடிவானது.. இது சம்பந்தமாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..

    முதல்வர்

    முதல்வர்

    'மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும் என்றும் கூறியிருந்தார்.. அதுமட்டுமல்ல, இம்மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன'' என்றும் ஸ்டாலின் தன்னுடைய அறிவிப்பில் தெளிவுபடுத்தி இருந்தார்.

     திறப்பு

    திறப்பு

    அதன்படியே, தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.. 25 அரசு மருத்துவம், 15 பல் மருத்துவ கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகள் என 60 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான விடுதிகளும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

     விடுதிகள்

    விடுதிகள்

    தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் கல்லூரிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது... மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது... மருத்துவ கல்லூரிகளை திறக்க சொல்லி உள்ள நிலையில், இம்மாணவர்களுக்கான விடுதிகள் திறப்பு பற்றின அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை.

     மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    கல்லூரிகள் மட்டும் திறக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர்கள் பலரும் விடுதிகளில் தங்கி படிப்பவர்களாக உள்ளனர்.. இத்தகைய மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களாகவும் உள்ளனர்.. இவர்கள் எப்படி தங்கள் சொந்த மாவட்டங்களை விட்டு, வெளியேறி கல்லூரிக்கு செல்ல முடியும்? அப்படியே சென்றாலும் எங்கு தங்கி படிப்பை தொடர்வார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

     ஆன்லைன் கிளாஸ்

    ஆன்லைன் கிளாஸ்

    ஏற்கனவே பல மாதங்களாகவே இவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.. எல்லாவித வகுப்பையுமே ஆன்லைன் கிளாஸில் நடத்த முடியாது.. காரணம் இவர்கள் மெடிக்கல் மாணவர்கள்.. பிராக்டிக்கல் வகுப்புகளை நேரடியாக கல்லூரிகளில் பங்கேற்றுதான் படிக்க முடியும்.. அதனால் ஆன்லைன் வகுப்புகள் இவர்களுக்கு முழுவதுமாக பொருந்தாத பட்சத்தில்தான் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

     கொரோனா டெஸ்ட்

    கொரோனா டெஸ்ட்

    ஆனால், விடுதிகளை எப்போது திறப்பார்கள்? திறக்க வாய்ப்பு உள்ளதா? அல்லது இது சம்பந்தமாக இனிமேல்தான் அறிவிப்பு ஏதாவது வெளியாகுமா? என்று தெரியவில்லை.. அதேபோல விடுதிகளில் தொற்று பரவாது என்றும் உறுதியாக சொல்வதற்கில்லை.. காரணம், சில மாதங்களுக்கு முன்பு, ஐஐடி சென்னை மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக ஹாஸ்டலில் வசிக்கும் மாணவர்கள் எல்லாருக்குமே ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுத்து பார்த்தனர்.. அதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருந்தது..

     மாணவர்கள்

    மாணவர்கள்

    ஐஐடி என்றில்லை, கடந்த மார்ச் மாத இறுதியில், காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள தனியார் மெடிக்கல் கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது.. இதற்கு காரணமே இந்த கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த 6 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதுதான்.. அதற்கு பிறகுதான் மொத்தம் 40 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது..

    ஹாஸ்டல்

    ஹாஸ்டல்

    ஹாஸ்டல் என்றாலே வெறும் மாணவர்களை மட்டுமே கணக்கில் எடுக்க முடியாது... அங்கு காய்கறி லோடுகளை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள், கிச்சனில் சமைப்பவர்கள், செக்யூரிட்டிகள் முதல் எத்தனையோ பேர் வந்து செல்லும் இடமாக உள்ளதால், தொற்றுக்கான பாதிப்புகளும் அதிகம் .. தற்சமயம் தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்தாலும், 3வது அலை வரப்போவதாக சொல்கிறார்கள்.. அதுவும் கோவைக்குதான் முதலில் வரப்போகுதாம்.. அங்குதான் அதிக பாதிப்பும் ஏற்பட போகுதாம்.. இப்படிப்பட்ட சூழலில் மெடிக்கல் கல்லூரிகளை திறந்தாலும், வரப்போகும் தொற்று எந்த அளவுக்கு தமிழகத்தை பாதிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை..

    மாணவர்கள்

    மாணவர்கள்

    அதேசமயம் 8 மாதமாக படிக்க முடியாமல் அனைத்து விதமான மாணவர்களும் தவித்து விட்டனர்.. அதனால் இனி பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றாலும், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு என்ன என்பதுதான் தெரியவில்லை.. இது சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கிறது.. எனவே, இது சம்பந்தமான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின், இனியாவது வெளியிடுவாரா என தெரியவில்லை.. பார்ப்போம்..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+