சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்டா+ வைரஸிடம் பாடம் கற்ற தமிழகம்.. ஓமிக்ரானை எதிர்கொள்ள தயார்

Google Oneindia Tamil News

சென்னை: ஓமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வந்தாலும், தமிழகம் அதனை சிறப்பாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

டெல்டா வைரஸ் பாதிப்புடன் 2021ஆம் ஆண்டை தொடங்கிய தமிழகம், உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்துடன் ஆண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில், பொது சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்ற மாநிலங்கள் அதிக அளவு பொதுத்துறையில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.

 கனமழை எதிரொலி: சென்னையில் 4 முக்கிய சுரங்கப்பாதைகள் மூடல்.. பஸ் சேவையில் மாற்றமா? முக்கிய அறிவிப்பு கனமழை எதிரொலி: சென்னையில் 4 முக்கிய சுரங்கப்பாதைகள் மூடல்.. பஸ் சேவையில் மாற்றமா? முக்கிய அறிவிப்பு

இந்தநிலையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முதலீடுகளை பாதியாக குறைத்துள்ளது. டெல்டா வைரஸ் தாக்கத்திலிருந்து தமிழகம் நல்ல பாடத்தை கற்றுகொண்டதன் மூலம் ஓமிக்ரான் பாதிப்பு சிறப்பாக கையாள வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை

கொரோனா இரண்டாவது அலை

2021 ஆம் ஆண்டு மார்ச் 18ம் தேதியில் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதாவது மே 21 தேதிகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 36 ஆயிரத்திற்கும் மேலாக உயர்ந்தது. இந்த பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை என கடும் நெருக்கடிகளை தமிழகம் சந்தித்தது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

ஆக்சிஜன் பற்றாக்குறை

மருத்துவமனைகளில் அதிக அளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா மரணங்கள் காரணமாக சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவமனைக்கு வெளியே நீண்ட வரிசைகளில் ஆம்புலன்சில் காத்திருந்தன. அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் டெல்டா பாதிப்பு காரணமாக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தமிழகம் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டை இரட்டிப்பாக்கியது.

ஓமிக்ரானை எதிர்கொள்ள தயார்

ஓமிக்ரானை எதிர்கொள்ள தயார்

இந்தநிலையில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கையாள்வதற்கு தமிழகம் தயார் நிலையில் உள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் தயாராக உள்ளன எனவும், கொரோனா சிகிச்சை மையங்களில் 50,000 படுக்கைகள் தயாராக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

போதிய மருத்துவ வசதிகள்

போதிய மருத்துவ வசதிகள்

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பிரபு கூறும்போது, ஓமிக்ரான் பாதிப்பை கையாள்வதற்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட மனித வளம் தமிழகத்தில் போதுமான அளவு இருப்பதாகவும், தற்போது 8,200 மருத்துவர்கள், 6000 சிறப்பு மருத்துவர்கள், 2,100 ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் உள்ளதாகவும், தமிழகத்தில் 8 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டில் ஓமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ள இவை வசதியாக இருக்கும் என கூறியுள்ளார்.

கொரோனா குறித்த அனுபவம்

கொரோனா குறித்த அனுபவம்

2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ துறை தலைவர் பரந்தாமன் கூறும்போது, முதல் அலையில் நோயைப் பற்றிய அதிக தகவல்கள் தங்களிடம் இல்லாத நிலையில் அது முதன் முதலில் நுரையீரலைப் பாதிக்கிறது என்பதை கண்டறிந்ததாகவும், குறிப்பிட்ட மருந்துகளைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

வீரியம் குறைந்துள்ளது

வீரியம் குறைந்துள்ளது

இந்நிலையில் கொரோனா குறித்து தற்போது அனுபவம் வாய்ந்தவர்களாக தமிழக மருத்துவர்கள் இருப்பதால் எந்த சூழ்நிலையிலும் சிகிச்சையை உடனடியாக தொடங்கலாம் எனவும், கொரோனா வைரஸ் மாற்றமடைந்து வேகமாக பரவும் தன்மை அதிகரித்து இருந்தாலும், அதன் வீரியம் குறைந்துள்ளது என்றும் வரவிருக்கும் ஆண்டில் அதிகமனோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும்விரைவி குணமடைவார்கள் என்றார்.

மக்கள் மாற வேண்டும்

மக்கள் மாற வேண்டும்

மக்களின் நடத்தை மாற வேண்டும், எல்லோரும் கொரோனா காரணமாக யாரையாவது இழந்திருக்கிறார்கள் , முகக்கவசம் கழற்றும் மக்கள் அதனை உணர வேண்டும் எனவும், இரண்டாம் அலையில் தாங்கள் எப்படி அவதிப்பட்டோம் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள் என சென்னை சுதர் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி என் ரவிசங்கர் கூறியுள்ளார்.

English summary
Although the incidence of Omicron is increasing in Tamil Nadu, medical experts say that Tamil Nadu is ready to deal with it better. Other states are increasingly investing heavily in the public sector to boost public health and public immunity. In this situation, Tamil Nadu has halved its investment than other states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X