மீஞ்சூர் போறீங்களா.. தச்சூர் ரோட்டில் "இந்த" வாகனங்கள் செல்ல தடை.. மீறினால் ரூ.1000 அபராதம்.. அதிரடி
சென்னை: மீஞ்சூர் - தச்சூர் கூட்டுச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. என்ன காரணம்? இந்த அறிவிப்பின் பின்னணி என்ன?
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் சரக்கு ரயில்களும் சென்று வருகின்றன. இதற்காக அடிக்கடி இந்த கடவுப்பாதை மூடப்படுகிறது.

ஆபத்து: இதனால் மீஞ்சூர் காட்டூர் நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.. இதனால், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக்கொள்கின்றன. எனவே, ரயில்வே கேட்டுக்குள் நுழைந்து தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலைமைக்கு பொதுமக்கள் ஆளாகி உள்ளனர்.. அதனால்தான், மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.. அதன்படியே, மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சுமார் ரூ.55 கோடி மதிப்பில் 740 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கும் பணியும், இப்போது முடிந்துள்ளது.. மற்றொருபுறம், ரயில்வே கேட் பகுதியை இணைக்கும் பாலம் கட்டும் பணியும் பாதியில் நிற்கிறது.. இதனால், மீஞ்சூர், அதனை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.. இந்த பணியினை விரைந்து முடிக்க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றன.
கனரக வாகனங்கள்: இதனிடையே, மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. மீஞ்சூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வருகின்றன.
எனவே, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் சாலை + தச்சூர்-பொன்னேரி- மீஞ்சூர் சாலையை ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால் நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன... இதன்காரணமாக, கனரக வாகனங்கள் மீஞ்சூர்- வண்ட லூர் சாலையை பயன்படுத்தவும் பொன்னேரிக்குள் நுழையவும் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

பள்ளிகள் திறப்பு: ஏற்கனவே பள்ளி நேரத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கோடை விடுமுறையில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தினால், 6 பேர் விபத்தில் உயிரிழந்துவிட்டனர்.. இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் பள்ளிகள் திறந்துள்ள நிலையில், விதிமுறைகளை சரியாக பின்பற்ற உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக தச்சூர் கூட்டு சாலைக்கு எந்த கனரக வாகனமும் வரக்கூடாது, இதை மீறினால் ரூ.1000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதைத்தவிர, சாலையின் ஓரங்களில் விளம்பர பேனர் வைக்ககூடாது, சாலையின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
அதிரடி உத்தரவு: முன்னதாக, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.. சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எம்எல்ஏ துரை சங்கர் சேகர், நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications