Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தற்கொலைக்கு தூண்டும் வகையில் போலீஸ் டார்ச்சர்: மாஜிஸ்திரேட்டிடம் மீரா மிதுன் பகீர் புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலீசார் தன்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு டார்ச்சர் செய்கின்றனர் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் புகார் தெரிவித்தார். அவருக்கு இரண்டு வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது.

துணை நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசியதால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

மீரா மிதுன் கைது

மீரா மிதுன் கைது

தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று போலீசாருக்கு சவால் விட்ட மீரா மிதுனை கேரளாவில் கடந்த 14-ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்த மீரா மிதுனுக்கு நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது.

அடுத்தடுத்து வழக்குகள்

அடுத்தடுத்து வழக்குகள்

அதன்பிறகு மீரா மிதுன் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. அதாவது மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எம்.கே.பி.நகர் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். இது அவர் மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்காகும். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

மூன்றாவது வழக்கு

மூன்றாவது வழக்கு

இந்த இரண்டாவது வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனாலும் வன்கொடுமை சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் மீரா மிதுனால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனையடுத்து மேலும் ஒரு அடியாக மீரா மிதுன் மீது மூன்றாவது வழக்கை எழும்பூர் போலீசார் பதிவு செய்தனர்.

ஹோட்டல் நிர்வாகம்

ஹோட்டல் நிர்வாகம்

அதாவது ஜோ மைக்கல் பிரவீன் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் பிரஸ் மீட் வைத்தார். அந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் காவல்துறையை கடுமையாக விமர்சித்தபோது, பிரஸ் மீட் நடத்த வேண்டாம் என்று ஹோட்டல் நிர்வாகம் மீரா மிதுனிடம் கூறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மீரா மிதுன் ஹோட்டல் மேலாளரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது மூன்றாவது வழக்காகும்.

Recommended Video

    எதுக்கு இந்த வேலை Meera Mithun? Actress Sanjana Singh கேள்வி | Oneindia Tamil
    நான்காவது வழக்கு

    நான்காவது வழக்கு

    இதன் பிறகு ஜோ மைக்கல் பிரவீன், மீரா மிதுன் மீது கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இது மீரா மிதுன் மீது போடப்பட்ட 4-வது வழக்காகும். இந்த கடைசி இரண்டு வழக்கு தொடர்பாகவும் மீரா மிதுனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு வழக்கு தொடர்பாக மீரா மிதுனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

    போலீசார் டார்ச்சர்

    போலீசார் டார்ச்சர்

    அப்போது மாஜிஸ்திரேட்டுவிடம், '' என் மீது வேண்டுமென்றே எந்த ஒரு காரணமும் இல்லாமல், போலீசார் அடுத்தடுத்து வழக்குகள் போடுகின்றனர். எனக்கு ஜாமீனே கிடைக்க கூடாது என்று செயல்படுகின்றனர். போலீசாரின் டார்ச்சர் என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்னை டார்ச்சர் செய்கின்றனர்'' என்று மீரா மிதுன் கூறினார். இதற்கு பதில் அளித்த மாஜிஸ்திரேட்டு, ''உங்கள் மீது போடப்பட்ட ஒவ்வொரு வழக்குகளும் காரணத்தோடுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

    வழக்கறிஞர் எங்கே?

    வழக்கறிஞர் எங்கே?

    மேலும், மாஜிஸ்திரேட்டு மீரா மிதுனிடம், '' உங்கள் வழக்கறிஞர் எங்கே?'' என்று கேட்டனர். ''மீரா மிதுன் வழக்கறிஞருக்கும், அவரது குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்து விட்டீர்களா'' என்று போலீசாரிடம் மாஜிஸ்திரேட்டு கேட்டார். இதன்பிறகு போலீசார் இருவருக்கும் தகவல் கொடுத்து விட்டனர். இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது கடைசியாக போடப்பட்ட இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    வெளியே வர முடியாது

    வெளியே வர முடியாது

    மீரா மிதுன் மீது பதியப்பட்டுள்ள மொத்தம் 4 நான்கு வழக்குகளில், 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்து விட்ட போதிலும் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஏனென்றால் முதன் முதலாக அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து போலீசார் மீரா மிதுனை புழல் சிறையில் அடைத்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+