Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்டிஏ கூட்டம்! மோடி காலில் விழுந்த நிதிஷ்? பரபரப்பான டாப் 10 அப்டேட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அதில் கவனிக்க வேண்டிய டாப் 10 விசயங்கள் என்ன?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்பிகள் கூடி ஒருமனதாக மோடியைத் தலைவராக இன்று தேர்ந்தெடுத்துள்ளனர். அதனை அடுத்து அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

lok sabha election 2024 NDA alliance Meet Narendra Modi Nitish Kumar Chandrababu Naidu

இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கிங் மேக்கர் என்று பல ஊடகங்கள் வர்ணித்து எழுதி வந்தனர். அவர், அமைய உள்ள புதிய அமைச்சரவையில் முக்கிய துறைகளைக் கேட்டுப் பெறுவார் என்றும் அதற்கான அழுத்தம் தருவார் என்றும் பல ஊகங்கள் உலாவின.

ஆனால், இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற நிதிஷ்குமார், “நான் எப்போதும் மோடியுடன்தான் இருப்பேன்” என்று பேசியதுடன், அவரது காலில் விழுந்து வணங்க முயன்றார்.

ஆனால், அதை மோடி தடுத்துவிட்டார். மேலும் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ள மோடி, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மிக நீண்ட ஒரு உரையை நிகழ்த்தினார்.

ஆட்சி நடத்துவதற்குப் பெரும்பான்மை என்பது முக்கியமல்ல; என்றவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு என்டிஏ ஆட்சிதான் நடக்கும் என்றும் நாட்டை ஜனநாயகப் பாதையில் வழிநடத்தி, 140 கோடி மக்களுக்குமான ஆட்சியைத் தருவோம் என்றும் பேசினார்.

இதனை அடுத்து மோடி பிரதமராக வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் விழாவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடந்து முடிந்துள்ள என்.டிஏ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் கவனிக்க வேண்டிய டாப் 10 விசயங்கள் என்ன? அதற்கான பட்டியல் இதோ:

1) என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் கூடி மோடியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன்பின்னர் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட மூத்த கூட்டணி உறுப்பினர்கள் காபந்து பிரதமராக உள்ள மோடியுடன் சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திப்பார்கள். அவரிடம் ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டு மொத்த பட்டியலை முறைப்படி வழங்குவார்கள்.

2) ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஷ்ரவன் குமார் இது குறித்து பிடிஐயிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “அமைச்சரவை பதவி விவகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடியும், எங்கள் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரும் முடிவு செய்வார்கள். ஆனால், அது மரியாதை அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

3) அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் நேற்று முழுவதும் கூட்டணிக்கட்சிகளுக்கு இலக்கா ஒதுக்குவது தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

lok sabha election 2024 NDA alliance Meet Narendra Modi Nitish Kumar Chandrababu Naidu

அவர்களிடம் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரான ஷ்ரவன் குமார், மத்திய அமைச்சர்கள் குழுவில் தங்களது கட்சிக்கு "மதிப்பு தரும் வகையில் பிரதிநிதித்துவம்" வேண்டும் என்ற கோரிக்கையின் வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

மேலும் அக்னிவீர் மற்றும் பீகார் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டதாகத் தகவல் கசிந்துள்ளது.

4) ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமாரின் தனது கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகளைக் கோரியுள்ளதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.

மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தனித்து ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு மொத்தம் 272 உறுப்பினர்கள் தேவை. அந்தளவு இடம் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், என்.டி.ஏ கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளனர்.

ஆகவே, இந்த அரசு நிலையான ஆட்சியை வழங்கும் என்ற உறுதியை மோடி இந்தக் கூட்டத்தில் வழங்கி இருக்கிறார். தேர்தலுக்கு முன் மோடியின் கியாரண்டி என்பது திட்டங்கள் சார்ந்ததாக இருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அது நிலையான ஆட்சிக்கான கியாரண்டியாக மாறியுள்ளது.

5) பாஜக அமைக்க உள்ள அமைச்சரவையில் பீகாருக்குப் பல வழிகளில் அதிருஷ்டம் அடித்துள்ளது. அதாவது 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றுள்ள திமுகவுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு 12 எம்பிக்களை வைத்துள்ள நிதிஷூக்கும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவுக்கும் கிடைத்துள்ளது.

பீகாரில் நிதிஷ்குமாரை தவிர்த்து ராம்விலாஸ் பஸ்வான் கட்சியான கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்திக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், மோடியின் தலைமையின் கீழ் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளதாக பிடிஐயிடம் கூறியுள்ளார்.

இவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டால் பீகாரின் பலம் அதிகரித்துவிடும்.

6) மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்குப் பதிலாகக் கட்சியில் உள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிக்கு வழங்குவதற்கான பரிசிலினை செய்யும்படி மோடியிடம் கூறியுள்ளதாக சிவசேனா கட்சி வட்டாரம் தகவல் தருகிறது.

7) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அனைத்து இன்று புதிய பிரதமராக மோடி பதவியேற்க தங்களின் ஆதரவு கடிதங்களைக் குடியரசுத் தலைவரிடம் வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8) கூட்டணி அரசின் தலைவராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ள மோடி, கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற பாஜக கட்சி எம்பிகள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்போது அவரை ஒருமனதாக அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

9) கடந்த சில ஆண்டுகளாக அரசியல் பலம் இழந்து இருந்தது ஐக்கிய ஜனதா தளம். அதாவது பாஜக மற்றும் ஆர்ஜேடியை விட அக்கட்சி பின்தங்கி இருந்தது. இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நிதிஷ் கட்சி பலமான கட்சியாக இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு மாறியுள்ளது.

10) அதாவது 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சிக்குப் பிறகு, 12 நாடாளுமன்ற உறுப்பினர்களைவைத்துள்ள ஜேடி(யு), பாஜக கூட்டாளிகளில் இரண்டாவது பெரிய கூட்டாளியாக மாறியுள்ளது. பாஜகவின் ஆட்சியை அடுத்த 5 ஆண்டுகள் வரை நீடிக்க வைக்கக் கூடிய மந்திரக் கோல் இந்த இருகட்சிகளின் தலைவர்கள் கையில்தான் சிக்கிக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+