தூண்டிலில் சிக்கிய "பிஞ்சுகள்".. யார் அந்த ஹோட்டல் ஓனர்.. வாசனையே வராதாமே.. வீட்டிலேயே கேக்.. ஷாக்
சென்னையில் கஞ்சா சாக்லேட்டை விற்பனை செய்த 2 பேர் கைதாகி உள்ளனர்
சென்னை: சென்னையை சுற்றி கஞ்சா புழக்கம் அதிகமாகி வரும் நிலையில், அதுகுறித்த நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.. அந்த வகையில் மிக முக்கியமான ஆபரேஷன் ஒன்று தலைநகரத்தில் எடுக்கப்பட்டுள்ளது..!
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாகி வருகின்றன.. இதை எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்ப, தமிழக அரசும் விழித்து கொண்டது.
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வேட்டை
அந்தவகையில், சென்னையில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது... இதில் போலீசார் தீவிரமான கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகிறார்கள்.. அப்போதுதான், அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.. ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்தனர்.. அதாவது, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் போலீசாருக்கு தெரியாமல் கஞ்சா பயிர்களை பயிரிடுகிறார்கள்.

கஞ்சா சாக்லேட்
இந்த பயிர்களை அறுவடை செய்து பொடியாக்கி, பிறகு சென்னைக்கு கடத்தி வருகிறார்கள்... இதற்காகவே, தேனி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் சிலர் சென்னையில் தங்கி இருந்து இந்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் மோப்பம் பிடித்தனர்.. சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து வருகிறார்கள்... அதேபோல, கஞ்சாவை சாக்லேட்டுக்குள் கலந்து, அந்த கஞ்சா சாக்லேட் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பெட்டிக்கடைகள்
குறிப்பாக, சென்னையில் உள்ள பெட்டிகடைகள், பள்ளி, காலேஜ்களுக்கு அருகில் உள்ள கடைகளில் இந்த கஞ்சா சாக்லேட் விற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.. இதையடுத்து, வேட்டையை ஆரம்பித்தனர் போலீசார்.. இளம் மாணவ, மாணவிகளை குறி வைத்து, இந்த பெட்டிக்கடைகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.. அதிலும் இளம்பெண்கள் சிலர் இந்த சாக்லேட்களுக்கு அடிமையாகி வருவதாகவும் தெரிகிறது.. சந்தேகப்படும்படியான பெட்டிக்கடைகளில் ரவுண்டு கட்டிய போலீசார், அதிரடி நடவடிக்கை எடுத்து தற்போது அந்த சாக்லேட் விற்பனையை கட்டுப்படுத்தி விட்டனர்.

நுங்கம்பாக்கம்
ஆனால், இந்த விஷயம் தெரிந்த, கஞ்சா வியாபாரிகள், சாக்லேட்டுகளுக்கு பதிலாக, கேக்கில் கஞ்சா கலந்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். இந்த வியாபாரமும் சென்னை மாணவ - மாணவிகளை குறி வைத்தே நடந்து வருகிறதாம்.. அந்தவகையில், நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது... பின்னர் இதற்காகவே ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, களத்தில் இறங்கியது.. இப்படி ஒரு காரியத்தை செய்து வரும் விஜய்ரோஷன் டேக்கா, பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்..

ஹோட்டல் + கிராக்கி
விஜய்ரோஷன் டேக்கா நுங்கம்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருபவராம்.. இவர்கள் 2 பேரிடமிருந்து கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல தகவல்கள் வெளியாகின.. கஞ்சா கேக் விற்பனையை இவர்கள் கடந்த 2 வருடங்களாகவே செய்து வருகிறார்களாம்.. இதே சென்னையில்தான் சைலண்ட்டாக விற்றுள்ளனர்.. இந்த கேக்கை, இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆகியோரும் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர்...

வாசனை கேக்
இந்த கஞ்சா கேக்குக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருந்து வந்துள்ளது.. காரணம், இந்த கஞ்சாவை கேக்குடன் கலந்து சாப்பிடும்போது, கஞ்சா வாசனை வராதாம்.. கேக் சாப்பிடுவது போலவே இருக்குமாம்.. ஆனால், கேகை சாப்பிட்டு முடித்தவுடமே போதை ஏறிவிடும்.. இந்த பழக்கத்துக்கு மாணவிகள், மாணவர்கள் பலர் அடிமையாகி உள்ளனர்... இந்த கஞ்சா கலந்த கேக்கை, கேக் வியாபாரி ஒருவர், தன்னுடைய வீட்டிலேயே வைத்து தயாரித்து, அதற்கு பிறகு விஜய ரோஷனுக்கு அனுப்பி வைப்பாராம்.. வழக்கமாக கேக் செய்வது போலவேதான் இதையும் செய்வார்களாம்..

எசன்ஸ்
ஆனால், எசன்ஸ் போடும்போது மட்டும் அதற்கு பதிலாக கஞ்சா பொடியை கரைத்து ஊற்றிவிடுவார்களாம்.. அந்த ஓட்டல் அதிபர் விஜய ரோஷன், அதை தனக்கு தெரிந்தவர்களுக்கும், பிற ஹோட்டல் ஓனர்களுக்கும் தந்துள்ளார். இதனால், ஹோட்டல்களில் இந்த கேக்குக்கு டிமாண்ட் கூடிவிட்டதாம்.. வழக்கமாக பிறந்தநாள் கேக் விலை ரூ.1000 இருக்கும். ஆனால் இவர்கள் டபுள் மடங்கு அதாவது ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.. தவிர, இந்த கேக்கை சின்ன சின்ன துண்டுகளாக்கி, அதையும் கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு விற்றுள்ளார் விஜய ரோஷன்..

கைது
150 கிராம் எடை கொண்ட கேக், ரூ.500 வரை விற்பனை செய்துள்ளார்... இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. கைதானவர்கள் தந்த தகவலையடுத்து, கார்த்திக், ஆகாஷ், பவன் கல்யாண் என மேலும் 3 பேர் கைதாகி உள்ளனர்.. இந்த கஞ்சா கேக்கை தயாரித்து கொடுத்த கேக் வியாபாரி மட்டும் எஸ்கேப் ஆகி உள்ளார்.. அவர் யாரென்று போலீசார் அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்களாம்.. ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார்... போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. அதனால், அவரையும் பிடிக்கும் வேட்டை ஆரம்பமாகி உள்ளது.

கண்காணிப்பு
இவர்கள் எப்படி சிக்கினார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.. நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் சிலர் ரகசியமாக கேக் விற்பனை செய்து வருவதாக ரகசியமாக போலீசுக்கு தகவல் கிடைத்தது... அதன்படி கடந்த 16ம்தேதி சம்பவ இடத்திற்கு போலீசார் மப்டியில் சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர்.. அப்போது, அந்த ஹோட்டல் முன்பு 2 பேர் நின்றிருந்தார்களாம்.. அவர்களிடம், சில இளைஞர்கள் பணத்தை கொடுத்து விட்டு கேக் வாங்கி சென்றுள்ளனர்.. அப்போதுதான் கேக் மூலம் கஞ்சா விற்பனை என்பதே போலீசுக்கு தெரியவந்துள்ளது.. போதை ஸ்டாம்பு இருந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்... விஜயரோஷனுக்கு 28 வயதாகிறதாம்.. டாட்டூ கலைஞர் தாமஸுக்கு 27 வயதாகிறதாம்.. இருவரும் ஆந்திராவில் இருந்தும் கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய்யை வாங்கி விற்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications