தமிழகத்தில் இன்று 26வது மெகா தடுப்பூசி முகாம்.. 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது..!
26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது
சென்னை: தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடக்கிறது... இந்த முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது
Recommended Video
உலகையே மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தமிழ்நாட்டையும் பதம் பார்த்தது.. அந்த வகையில், இதற்கான சிகிச்சைகள், மருந்துகள் என்ன என்று ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போதைக்கு தடுப்பூசி ஒன்றுதான் நமக்கு கை கொடுத்துள்ளதால், உலக நாடுகள் இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகம்
தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி போடும் பணி கடந்த வருடம் ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது... இதில், ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் தனித்தனியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது... முதலில் 18 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.. இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

விஸ்வரூபம்
இன்னும் 2 டோஸ் தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.. அதேபோல், முதல் டோஸ் தடுப்பூசி போடாமல் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள்.. புதுபுது வைரஸ்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பல ரூபங்களில் விஸ்வரூபமாகி உள்ளனர், இவர்கள் எல்லாம் இன்னமும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதது சுகாதாரத்துறைக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.. அதனால்தான் தொடர்ந்து இப்படி தடுப்பூசி முகாம்களையும் அம்மக்களுக்காக நடத்தி கொண்டிருக்கிறது.

மெசா சிறப்பு முகாம்
அந்த வகையில், தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.. மொத்தம் 50 ஆயிரம் மையங்களில் நடக்க உள்ளது.. 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். மெகா சிறப்பு முகாம்களில் முன்பு 20 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.. இன்று நாளை நடைபெறும் முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து இனி வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மறுபடியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை
சென்னை பொறுத்தவரை தொற்று பாதிப்பு எண்ணிக்கையுடையோர் அதிகம் உள்ள மாவட்டம் ஆகும்.. அதிலும் முதல் மாவட்டமாகும்.. இப்போதைக்கு முதல் டோஸ் 98 சதவீதமும், 2-வது டோஸ் 87 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது தடுப்பூசி போடும் தகுதி வாய்ந்தவர்களும் இன்றைய தினம் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,600 மையங்களில் இந்த முகாம்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications