முக்கிய அரசியல்வாதியின் மருமகள் ஆகிறார் நடிகை மேகா ஆகாஷ்.. திருமணத்தில் ராகுல், ஸ்டாலின் பங்கேற்பு!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் வீட்டுக்கு மருமகள் ஆகிறார் நடிகை மேகா ஆகாஷ். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுக்கும், நடிகை மேகா ஆகாஷுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் பல முன்னணி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனராம்.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். ரஜினிகாந்த்தின் 'பேட்ட' படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த மேகா ஆகாஷ் கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் மேகா ஆகாஷ். தனது காதல் கணவராகப் போகும் நபரின் பெயர் சாய் விஷ்ணு என குறிப்பிட்டு அவரையும் அறிமுகப்படுத்தி இருந்தார் மேகா ஆகாஷ். மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேகா ஆகாஷின் வருங்கால கணவர் சாய் விஷ்ணு யார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி அரசியல் தலைவரின் வாரிசு என்பதுதான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய செய்தி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவராகவும், மத்திய, மாநில அமைச்சராகப் பொறுப்புகளை வகித்துள்ளவருமான காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் தான் சாய் விஷ்ணு.
திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் சாய் விஷ்ணு, சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குநர் பா. ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
மேகா ஆகாஷுக்கு சாய் விஷ்ணுவை 9 வருடங்களாகத் தெரியுமாம். கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்களாம். இந்நிலையில் தான் பெற்றோர் சம்மதத்தோடு இருவரும் மண வாழ்வில் இணைய இருக்கிறார்கள்.

சென்னையில் சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடியின் நிச்சயதார்த்தம் அண்மையில் எளிமையாக நடந்து முடிந்த நிலையில், வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி இவர்களது திருமண வரவேற்பும், 15 ஆம் தேதி திருமணமும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமண பத்திரிகையை அரசியல் கட்சி தலைவர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார் திருநாவுக்கரசர். அண்மையில் டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முன்னணி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருநாவுக்கரசர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கும், டாப் திரையுலக பிரபலங்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது மகனின் திருமண அழைப்பிதழை பதிவிட்டுள்ள திருநாவுக்கரசர், இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் வருக என்று அழைப்பு விடுத்துள்ளார். மேகா ஆகாஷ் சாய் விஷ்ணு திருமணத்திற்கு திரை உலக பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அதிக அளவில் நேரில் வந்து வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications