மேகதாது அணை: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்து கட்சி குழு நாளை டெல்லி பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு நாளை டெல்லி செல்கிறது. டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திரசெகாவத்தை நாளை மறுநாள் தமிழக அனைத்து கட்சி குழு சந்திக்கிறது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழகம் ஒட்டுமொத்தமாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Mekedatu Dam row: TN All party team to meet Union Minister Gajendra Singh Shekhawat on Friday

தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மத்திய அரசின் அனுமதியுடன் மேகதாது அணையை கட்டுவோம் என்கிறது கர்நாடகா. தமிழகத்தின் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு கர்நாடகாவின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இத அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்த அனைத்து கட்சி குழு டெல்லி செல்லவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Mekedatu Dam row: TN All party team to meet Union Minister Gajendra Singh Shekhawat on Friday

இதனடிப்படையில் தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் குழு நாளை டெல்லி செல்கிறது. நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் இந்த குழு டெல்லி பயணம் மேற்கொள்கிறது.

Recommended Video

    பிடிவாதம் பிடிக்கும் Karnataka.. Mekedatu அணை விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

    டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை நேரில் சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட கூடாது என தமிழக அனைத்து கட்சி குழு வலியுறுத்த உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+