மீன்கள் இறக்கும்.. உப்புநீர் கசப்பாகும்! அப்படியே ஆசிட்டாக "மாறும்" கடல்கள்.. ஆரம்பித்த கெட்ட காலம்?
சென்னை: உலகில் பல்வேறு கடல்கள் ஆசிட்டாக மாறும் வாய்ப்புகள் உள்ளன, இதனால் கடல் நீர் உயிரினங்கள் வாழ தகுதியற்ற நீராக மாறலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Science என்ற சர்வதேச அறிவியல் இதழில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவருவது வழக்கம். இந்த இதழில்தான் தற்போது கடல் மாசு குறித்து ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது.
ஆர்டிக் கடலில் 1994-2022 வரை ஏற்பட்ட மாறுபாடுகளை ஆய்வு செய்து இந்த கட்டுரையை வெளியிட்டு உள்ளனர். இதில்தான் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடல்
அந்த ஆய்வு கட்டுரையில் கடந்த 16 வருடங்களில் கடல் நீரில் ஆசிட் அளவு 3 - 4 மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற கடல்களை விட ஆர்டிக் கடல் வேகமாக இப்படி ஆசிட் மயமாகி உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. ஐஸ் பாறைகள் உருகி, உருகி, கடல் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க இப்படி நடப்பதாக அந்த ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது. உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் வானிலை மாற்றம் காரணமாக துருவ பகுதிகளில் வெப்பநிலை வேகமாக உயர்கிறது.

ஆசிட் அளவு
அந்த வகையில்தான் ஐஸ் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிப்பதால் இப்படி கடலில் ஆசிட் அளவு அதிகரிப்பதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் 2050க்குள் ஆர்டிக் கடலில் ஆசிட் அளவு மிக மோசமான நிலையை அடையும். அதாவது இங்கே மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் வாழவே முடியாத நிலை ஏற்படும் என்று இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் மிக கடுமையாக பாதிப்பு அடையாளம் என்று கூறப்பட்டு உள்ளது.

ஐஸ் பாறைகள்
கடலை சார்ந்து வாழும் உயிரினங்கள் அனைத்தும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆர்டிக் கடலில் ஏற்படும் பாதிப்பு அதன்பின் மற்ற கடல்களுக்கும் செல்லும் என்று இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடலில் உள்ள உயிரினங்கள், அதை சார்ந்து உள்ள உயிரினங்கள், கடலில் உள்ள தாவரங்கள் பாதிக்கும். உதாரணமாக நாடுகளின் ஓடுகள் கூட உடையும் வாய்ப்புகள் உள்ளன.

காலநிலை மாற்றம்
தற்போது கடலில் உள்ள நீரின் பிஎச் அளவு 8.1 ஆக உள்ளது. இதுதான் பல மடங்கு உயரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐஸ் கட்டிகள் உருகும் போது அதனால் கார்பன் டை ஆக்சைட் அதிகரிக்கும். இதன் நீரில் கார்பன் அயான் அளவு அதிகரிக்கும். இதனால் கடலில் உள்ள நீரில் இருக்கும் பிஎச்சை குறைக்கும் திறன் குறைந்து போகலாம். இதனால் தானாக பிஎச் அதிகரிக்கும். இது கடலை ஆசிட் கடலாக மாற்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications