நான் முன்பே சொன்னேன்.. இப்போ வயநாட்டில் பாருங்க! வானிலை மையம் மீண்டும் தோல்வி.. மனோ தங்கராஜ் அட்டாக்
சென்னை: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 290க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மழை பற்றி மீண்டும் ஒரு முறை சரியாக கணிக்க தவறிவிட்டதாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் நல்ல தொழில்நுட்பத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள், குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. இதில் சிக்கி இதுவரை 296 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கேரள முதல்வர் மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து கூறியிருந்தால் இந்த நிகழ்வு நடந்திருக்காது என்று கூறினார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் இன்று பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜூலை 23 ஆம் தேதி அன்றே கனமழை குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது என்றும், ஜூலை 24 ஆம் தேதி 10 தேசிய மீட்பு படை குழுவும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது என்றும் கூறினார். மேலும் அப்போதே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்காது என அமித்ஷா கூறினார்.
இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் புள்ளி விவரத்தோடு பதில் அளித்திருந்தார். இந்த நிலையில், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், நான் முன்பு சொன்னது போல் இப்போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் தோல்வியடைந்து இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் ஒரு முறை தோல்வியுற்று இருக்கிறார்கள். நம் தமிழ்நாட்டில் பெரிய பேரழிவு ஏற்பட்ட போது இதே கருத்தை நான் பதிவு செய்து இருந்தேன். இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் நல்ல தொழில்நுட்பத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எல்லாத்தையும் புள்ளி விவரத்தோடு சொல்லிவிட்டார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்கள் எதுவுமே தெளிவானதாக இல்லை. இந்த நாள் இந்த டைமில் தான் அலர்ட் தந்து இருக்கீங்க. ஆரஞ்ச் அலர்ட் தான் கொடுத்து இருந்தீங்க.. மண் சரிவு பற்றி எந்த அறிவிப்பையும் அவர்கள் தெளிவாக தரவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதை தவிர்த்துவிட்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தை சீர் செய்ய வேண்டும். மக்களுக்கு மழை பற்றிய தெளிவான தகவல்களை கொடுக்ககூடிய அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டும்.
ஜனநாயக நாட்டில் ஒரு அரசு என்பது எதிர்க்கட்சிகள், மக்கள் சொல்லக் கூடிய கருத்துக்களை உள்வாங்கி பதில் பேச வேண்டும். ஆனால் அவர்கள் முழுமையாக தங்களை பாதுகாத்துக்கொள்ளும் போக்கில் பேசுவது ஏற்றுக்கொள்ளும் கருத்து இல்லை. நான் ஏற்கனவே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன். எங்களுடைய முதல்வர் ஏன் செல்லவில்லை என்பதை கேட்பதை தவிர்த்துவிட்டு சென்ற முதல்வருக்கு நேர்ந்தது என்ன?

பெரிய மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் பல்வேறு கோரிக்கைகளுடன் செல்கிறார். ஐந்து நிமிடம் பேச வைத்துவிட்டு மணியை அடித்து நிறுத்த சொல்வது போல செயல்களில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய தவறான செயல். இப்படிப்பட்ட அவமானங்கள் வேண்டாம் என்று கூட நாம் நினைக்கலாம். இது தேவையில்லாத விஷயம்.
ஜனநாயகத்தில் முக்கியமான விஷயமே கருத்துக்களை கேட்பதும் கருத்துக்களை மதிப்பதும் தான். எதிர்தரப்பு கருத்துக்களாக இருந்தாலும் கூட அதை கேட்க வேண்டும் மதிக்க வேண்டும்.. அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. இதைத்தான் நாங்கள் திரும்ப திரும்ப சொல்கின்றோம். இன்று ஆளும் பாஜகவுக்கும், மோடிக்கும், ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயக செயல்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்பு, தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீட்டர் மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தென் தமிழகத்தில் பெய்த இந்த பெருமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக கணிக்க தவறிவிட்டதாகவும் ஆய்வு மையம் தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் மனோ தங்கராஜ் கூறியிருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications