வாரி சுருட்டிய மோச்சா.. மொத்தமும் போச்சா.. மழை மேகங்களை இழுத்து செல்லும்.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள மோச்சா புயல் அதி தீவிர நிலையை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மழை மேகங்களை இது இழுத்து செல்வதால் மாநிலத்தில் வெப்பநிலை கணிசமாக உயரும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு மோச்சா என்று பெயரிடப்பட்ட நிலையில் தற்போது இந்த புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று 8 கி.மீ வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்றைய (மே 13) தேதியை பொறுத்த அளவில் பீகாரிலிருந்து சுமார் 565 கி.மீ தொலைவிலும், வங்கதேசத்திலிருந்து 760 கி.மீ தொலைவிலும், மியான்மரிலிருந்து 690 கி.மீ தொலைவிலும்
நிலைகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இது நாளை (மே.14) மதியம் மியான்மரில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வடக்கு அந்தமான் பகுதியில் 65 கி.மீ வரை காற்று வீசும். தென்கிழக்கு வங்கக்கடலில் இதன் வேகம் 75 கி.மீ ஆக இருக்கும். சரி இதெல்லாம் இருக்கட்டும் இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏதேனும் நற்செய்தி இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு பதில் 'இல்லை' என்பதாகதான் இருக்கிறது. தொடக்கத்தில் இந்த புயல் உருவாகும்போது வட தமிழகத்திற்கு கொஞ்சம் மழை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் புயலின் போக்கு இந்த கணிப்பை அடித்து நொறுக்கிவிட்டது. பொதுவாக ஒரு இடத்தில் புயல் உருவாகிறது எனில் அந்த இடத்தை சுற்றியுள்ள மேகங்களை உறிஞ்சிக்கொண்டு புயல் வலிமையடையும். தற்போது மோச்சாவும் இதே வேலையைதான் பார்த்திருக்கிறது. இதில் கவலையளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில் இந்த புயல் அதிதீவிர புயலாக உருபெற்ற்றிருக்கிறது என்பதுதான். இதன் காரணமாக தமிழ்நாடு பக்கம் எட்டி பார்க்க இருந்த சில மழை மேகங்களையும் இந்த புயல் வாரி சுருட்டிக்கொண்டது.
ஏற்கெனவே அக்னி வெயில் தொடங்காததற்கு முன்னரே தமிழ்நாட்டில் வெயில் கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்தது. இப்படி இருக்கையில் கொஞ்ச நஞ்ச மழை மேகங்களையும் மோச்சா தனதாக்கிக்கொண்டதால் இனி சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெயில் மட்டும்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், "சென்னை மீனம்பாக்கத்தில் மே 13ம் தேதி வெயில் 40-41 டிகிரி (104-105.8 டிகிரி பாரன்ஹீட்) செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
கன்னியாகுமரி, தெற்று கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு லேசான மழை இருக்கும். ஆனால் ஊமை வாட்டி எடுக்கும்" என்று எச்சரித்துள்ளார். இதனால் மக்கள் கோடை வசஸ்தலங்களை நோக்ககி படையெடுக்க தொடங்கியுள்ளனர். வழக்கமாக கோடைக்காலங்களில் தமிழ்நாட்டில் லேசான மழை இருக்கும். ஆனால் புயுல் உருவாகாது. இந்த முறை புயல் உருவாகியும் லேசான மழைக்கு கூட வாய்ப்பில்லாமல் போயிருப்பது மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இந்த புயலானது வங்கதேசத்தின் காக்ஸ் பஜாருக்கும், மியான்மரின் காயுக்பியு நகருக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் இந்த பகுதியில் ஏரளாமான அகதிகள் இருக்கும் நிலையில் அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications