கிளாம்பாக்கத்திலிருந்து மெட்ரோ ரயில்.. கோயம்பேடு டூ பூங்கா.. பாமக நிழல் பட்ஜெட்டில் சொல்வது என்ன?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதுடன், கோயம்பேடு பேருந்து நிலையம் பூங்காவாக மாற்றப்படும் என பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.
கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும்:
- கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் முழுமையாக வேறு பேருந்து முனையங்களுக்கு மாற்றப்பட்ட பின், அது பூங்காவாக மாற்றப்படும்.
- கோயம்பேட்டில் அமைக்கப்படும் பூங்கா 66.4 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவாக அது அமையும்.

கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும். அதற்கான பணிகள் நடப்பாண்டில் தொடங்கும்.
- சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும். போரூர் - பூந்தமல்லி இடையே அடுத்தாண்டு போக்குவரத்துத் தொடங்கும்.
- கோயம்புத்தூரில் 144 கி.மீ.க்கு ரூ.9,424 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது:
- தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களை நிர்வாக சீர்திருத்தத்தின் மூலமாக இலாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.
- பறக்கும் சாலை திட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு
- தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பறக்கும் சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மாநில ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
- தாம்பரம் - செங்கல்பட்டு ஆறுவழி உயர்மட்ட சாலை, மதுரவாயல் - திருப்பெரும்புதூர் உயர்மட்ட சாலை, மாதவரம் சந்திப்பு - வெளிவட்டச் சாலை, திருச்சி - துவாக்குடி உயர்மட்ட சாலை ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு.
- தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் மாற்றவும், மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55லிருந்து 17ஆக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்:
- அளவுக்கு அதிகமான மின்கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் துயரைத் துடைக்கும் வகையில், மின் கட்டணம் குறைக்கப்படும்.
- இரு மாதங்களுக்கு ஒருமுறைக்கு பதிலாக, மாதம் ஒருமுறை மின்கட்டணம் கணக்கிடப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின் திட்டம் செயல்படுத்தப்படும்.
- காற்றாலை, சூரியஒளி மின் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
பள்ளிக்கல்விக்கு ரூ.1.25 லட்சம் கோடி, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.32,000 கோடி:
- அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்த சிறப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் மொத்தம் 1000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இருக்கும்.
- பள்ளிக் கல்வித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
- பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்காக சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நிதிதிரட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியைப் போன்று, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications