சென்னை மெட்ரோ வாட்டர் கட்டணம் உயர்வு.. 6 ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் லாரி கட்டணம் அதிகரிப்பு
சென்னை: சென்னையில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கட்டணம் உயர்ந்துள்ளது. 6,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.475ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.700ல் இருந்து ரூ.825 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு கட்டணத்தை உயர்த்தி உள்ளது சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம். உற்பத்தி செலவு அதிகரிப்பு, டேங்கர் லாரி வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளது மெட்ரோ வாட்டர் நிறுவனம்.

சென்னை மாநகராட்சியில், நாள்தோறும் 106 கோடி லிட்டர் குடிநீரை, சென்னை குடிநீர் வாரியம் குழாய் வாயிலாக விநியோகித்து வருகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு தேவைப்படுவோர், முன்பதிவு செய்து கட்டண அடிப்படையில் குடிநீரை வாங்கி வருகின்றனர்.
சென்னை குடிநீர் வடிகால் வாரியம் லாரிகள் மூலம் வழங்கும் குடிநீரை நம்பியே தலைநகர் முழுவதும் வீடுகளும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் உள்ளன. தினமும் 1,000 லாரிகளில் மெட்ரோ வாட்டர் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, முன்பதிவு லாரி குடிநீரின் விலையை, சென்னை குடிநீர் வாரியம் உயர்த்தி உள்ளது.
குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.75-ம், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிக்கு ரூ.125-ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம். 6,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.475ல் இருந்து ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 9,000 லிட்டர் லாரி தண்ணீர் ரூ.700ல் இருந்து ரூ.825 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், 12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், வணிக பயன்பாட்டுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி ரூபாய் 735ல் இருந்து 1,025க்கும், 9,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி ரூபாய் 1,050ல் இருந்து 1,535 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 12,000, 18,000 லிட்டர் லாரி குடிநீரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications