பொங்கி வரும் காவிரி.. ஒரே ஆண்டில் 7வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. செழிக்கும் வளம்!
சேலம்: மேட்டூர் அணை 2வது ஆண்டாக நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிப்பு எட்டி உள்ளது. 7வது முறையாக நிரம்பியதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி....
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளையும், முக்கிய எச்சரிக்கைகளையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் மற்றும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோரப் பகுதிக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 20 காலை 08:30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நீடிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி இந்த அணை 1925 இல் துவங்கி 1934 கட்டி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது இதன் மூலம் 13 டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்
மேட்டூர் அணை நடபாண்டில்
ஜூன் 29
ஜூலை 5
ஜூலை 20
ஜூலை 25
ஆகஸ்ட் 20
செப்டம்பர் 2
என மொத்தமாக நடபாண்டில் மேட்டூர் அணை ஆறு முறை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது
மேட்டூர் அணை
அதனை தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்தது இதனால் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வந்தது
இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து கடந்த ஐந்து தினங்களாக படிப்படியாக அதிகரித்தது நேற்று காலை 14 ஆயிரத்து 420 கனடியாக இருந்தது அதனை தொடர்ந்து மதியம் நீர் வரத்து மேலும் அதிகரித்தது இதன் காரணமாக மேட்டூர் அணை நடபாண்டில் ஏழாவது முறையாக நிரம்பியது
தொடர்ந்து ஆணைக்கு வரும் நீர் முழுமையாக 22500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணை சுற்றியுள்ள
தங்கமாபுரி பட்டினம் சேலம் கேம்ப் ஆர் எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடந்தாண்டு அக்டோபர் 22 ல் 98.56 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நீர்வரத்து அதிகரிப்பால் அக்டோபர் 23 ல் 100 அடி உயர்ந்தது தொடர்ந்து இன்று 365 வது நாளாக ஓராண்டு நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிக்கிறது நாளை இரண்டாவது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிப்பது விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications