100 நாள் வேலை திட்டம்.. தமிழ்நாடு சில்லு சில்லாக நொறுங்கிடுச்சே.. மத்திய அரசு தந்த ஷாக்.. போச்சு
சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை நீக்கி உள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டில்தான் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர்.
100 நாள் வேலை திட்டம் நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இதற்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது. 100 நாள் வேலை திட்டம் ஒரு காலத்தில் இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து மீட்டது. மக்கள் கையில் பணம் புரண்டதன் காராணமாக இந்தியாவின் பொருளாதார சரிவு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த 100 நாள் வேலை திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. பல நாட்கள் வேலை இருப்பது இல்லை. அதற்கும் முறையான சம்பளம் இல்லை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்று மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

பலர் நீக்கம்: இந்த நிலையில்தான் 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை நீக்கி உள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டில்தான் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் 100 நாள் வேலை பார்க்கும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பீகாரில் பலர் நீக்கப்பட்டு உள்ளனர். பீகாரில் 4,56,004 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் சத்தீஸ்கரில் - 3,36,375 பயனாளிகள் நீக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் அதிக பேரை நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.
தொடர் நீக்கம்: கடந்த இரண்டு ஆண்டுகளில் மையத்தின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (MGNREGS) இருந்து எட்டு கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், 2022-23 நிதியாண்டில் 20.47 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு நீக்கம் இது.
2019-2020ல் 1.83 சதவீதமாக இருந்த பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2022-23ல் 20.47 சதவீத அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. 2022-23ல் 4.24 சதவீத புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2023-24ல், 9.87 சதவீதம் பணியாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், 4.18 சதவீதம் பேர் சேர்க்கப்பட்டனர். வருடா வருடம் இந்த குறைப்பு அதிகரித்து வருகிறது.
புதிய விதி: இந்த நிலையில்தான் ஆதார் கார்டு மூலம் மட்டுமே சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற முறையை 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு புகுத்த உள்ளது. அதன்படி ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வருமானம் பெறுகிறார் என்றால், அவர் ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் முறை ஒன்றின் மூலம் மட்டுமே வருமானம் பெற முடியும்.
அதாவது யுபிஐயோ அல்லது வங்கி வழியாகவோ மட்டுமே பெற முடியும். இதில் எல்லாம் கணக்கு தொடங்க ஆதார் அவசியம். இதன் மூலம் 100 நாள் வேலை திட்டம் மூலம் வருமானம் பெறும் நபர்கள் கண்காணிக்கப்படுவார்கள். தீவிரவாதிகள், வெளிநாட்டினர் இந்த திட்டம் மூலம் வருமானம் பெறக்கூடாது என்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆனால் தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் நபர்களிடம் 80 சதவிகிதம் பேரிடம் மட்டுமே ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் சிஸ்டம் இருக்கிறது. அதனால் மீதம் உள்ள நபர்கள் வருமானம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications