இந்து அறநிலையத் துறையின் சொத்து பராமரிப்பு விதிகள் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் இருக்கும் கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு தற்போது இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்களை மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவிலுக்கு சொந்தமான சொத்துக்குள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகிறது. அதோடு கோவில் சொத்து விவரங்களும் இந்து சமய அறநிலையத் துறை இணைய பக்கத்தில் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிபபு, நிர்வாகம் தொடர்பான விளக்கங்கள் இடம்பெறாத காரணத்தால் இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புதிய விதிகள் வகுக்கும் வரை, கோவில்களில் கட்டுமானம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். சொத்துக்கள் உரிமை தொடர்பாக புதிய விதிகளை உடனே வகுக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, சட்ட விதிகளை ரத்து செய்வதற்கான எந்த காரணங்களும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேசமயம், சட்டத்தில் உள்ள தேவையற்ற விதிகளை நீக்கி, புதிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும், கோவில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், கோவில்களை முறையாக பாதுகாக்க வேண்டும், அதன் கட்டிடக்கலை மதிப்புக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications