முரண்பாடுகளின் முழு உருவம்.. புயலென சுழன்று.. பூமிபந்தை வளைத்து.. மக்களை நேசித்த "திரில்லர்" ஜாக்சன்

உலக மக்களை நேசித்த மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் போற்றும் அசாத்திய கலைஞன் மைக்கேல் ஜாக்சனின் பிறந்த நாள் இன்று! அவரை பற்றின நினைவுகளை அசைபோடுவதிலும், அவரிடம் பொதிந்து கிடந்த நல்லியல்புகளை பாராட்டுவதிலும் "ஒன் இந்தியா தமிழ்" உளமார பெருமை கொள்கிறது!

வாழ்க்கை பின்னணி, சமூகசூழல், இளம்பருவ காலத்து வளர்ப்பு போன்றவற்றில் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கும், இவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.. இருவருமே கருப்பினத்தில் பிறந்தவர்கள்.. இருவருமே பாலகர்களாக இருந்தபோது சரியாக பராமரிக்கப்படாதவர்கள். சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த இவர்களுக்கு குறிப்பிட்ட காலம்வரை போதிய கவனிப்பும் கிடைக்கவே இல்லை.

ஒபாமாவிற்காவது அவரது பாட்டி இருந்தார்.. அந்த மூதாட்டியின் உழைப்பும் தியாகமும்தான் அதிபர் என்ற சிற்பத்தை செதுக்க முடிந்தது.. ஆனால், இவருக்கு ஜாக்சனுக்கு அரவணைத்து பக்குவப்படுத்தவும், நல்வழியில் நெறிப்படுத்தவும் யாருமே இல்லாமல் போனார்கள்.. எனினும், இருவருமே எப்படியாவது சாதிக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தால் பிரம்மாண்டமாக வளர்ந்தவர்கள்!

மைக்கேல்

மைக்கேல்

அந்த வகையில், பிறந்த 10 வருடத்திலேயே.. புயலென சுழன்று... இடியென பாடி தனக்கென ஒரு புதிய முத்திரையை பதித்தவர் மைக்கேல் ஜாக்சன். அவர் பாடி தயாரித்து வெளியிட்ட குறுந்தகடுகள் பூபாளமெங்கும் நிறைந்து கிடக்கிறது. குறிப்பாக "திரில்லர்" என்ற குறுந்தகடு ஒரே நாளில் 10 கோடி எண்ணிக்கையில் விற்று வரலாறு படைத்தது. இந்த வரலாறு வேறு யாராலும் அவ்வளவு சீக்கிரம் உடைக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.

 முரண்பாடுகள்

முரண்பாடுகள்

மைக்கேல் ஜாக்சன் முரண்பாடுகளால் முற்றுகையிடப்பட்டவர்... கோடிக்கணக்கில் சம்பாதித்தார்... ஏழை, குழந்தைகள் மீதும் சிறுவர்கள் மீதும் இவருக்கு இருந்த அன்பையும் ஈடுபாட்டையும் சிலர் கொச்சைப்படுத்தி அதையே காரணமாக்கி கோடிக்கணக்கில் பணம் பிடுங்கிய சுயநலப் பேர்வழிகளும் உண்டு. அவரது போஸ்ட் மார்ட் ரிப்போர்ட்டுகள் பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியது. உடலெங்கும் காயங்களின் வடுக்களும், சிராய்ப்புகளும் இருந்தன! பல்வேறு வகையான போதை மாத்திரைகளும், வலி நிவாரணிகளும் அவரை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தன!!!

 தாம்பத்யம்

தாம்பத்யம்

ஜாக்சனின் புகழ் விண்ணின் உச்சியை நோக்கி பயணித்து கொண்டிருந்தபோதே அவரது குடும்ப உறவுகளும், ரத்த சம்பந்தமும் சீர்கெட்டு வந்தன.. 2 பெண்களை மணந்தும் தாம்பத்யம் தோல்வியடைந்தது.. குழந்தைகளை பெறுறம் அவற்றின் முழுமையான அன்பு அவருக்கு கிடைக்காமலேயே போயிற்று.

நேசம்

நேசம்

அவர் மறைந்த 3வது நாளே குழந்தைகளை செயற்கை கரு மூலம் பெற்றதாகவும், மைக்கேல் ஜாக்சன் அவற்றுக்கு தந்தை இல்லை என்றும் மனைவி ஷாக் தகவல் ஒன்றை சொன்னார்.. தன் மனைவி ஈன்றெடுத்த அந்த குழந்தைகளுக்கு தான் தகப்பன் இல்லை என்பது தெரிந்தும், அந்த குழந்தைகள் மீது ஜாக்சன் கொண்டிருந்த நேசமும் பாசமும் மகத்தானது.. விக்கித்து போக வைத்தது!

 இசை வெள்ளம்

இசை வெள்ளம்

உலக மக்களை மிக ஆழமாக நேசித்தவர் ஜாக்சன்.. அதேபோல, இந்த உலகமும் இவரை உண்மையான கலைஞராக ஏற்றுக் கொண்டது... மதம், நிறம், இனம் போன்ற எல்லா எல்லைக் கோடுகளையும் இவரது இசைவெள்ளம் உடைத்து நொறுக்கியது... புயலென சுழன்று பூமிப் பந்தையே வளைத்து போட்டது. மரணம் 2 வகையானது... ஒருவர் வாழந்து கொண்டிருக்கும்போதே மரித்து போகிறார்.. இன்னொருவரோ மரித்த பிறகும் வாழ்கிறார்.. மைக்கேல் ஜாக்சனும் அப்படியே!!

ஜீவிதம்

ஜீவிதம்

அவர் வாழ்ந்தது என்னவோ 50 வருஷம்தான்.. அவரது இசையோ 500 வருஷங்களையும் தாண்டி நிற்கும். ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் போவும்.. ஜீவிதமான ஓவியத்திற்கு பிகாசா போலவும்.. புயலை போல் பறந்து பறந்து பந்தாடிய புருஸ்லீ போலவும்.. மேற்கத்திய இசையின் முடிசூடா மன்னன் எல்விஸ் பிரெஸ்லி போலவும்.. மைக்கேல் ஜாக்சனும் மக்கள் மத்தியில் என்றுமே வாழ்வார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+