அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு ‘ஜாக்பாட்’.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பதிலுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டபையின் 5 ஆம் நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். புதிய முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் 1,088 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார். கூடுதலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 3,400 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அரசு பள்ளிகள் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்க ஏதுவாக, ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் அவர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
-
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்












Click it and Unblock the Notifications