சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

    சென்னை: மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ராஜலட்சுமி, தஞ்சை திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம், அமைச்சர் வேலுமணி என பல தலைவர்கள் ஆர்வமுடன் காலையிலேயே வாக்களித்தனர்.

    தமிழகத்தில் வேலுரைத் தவிர 38 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.

    இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

     ஓ... இப்போ கூட்டம் குறைவா இருக்கே.. ஓட்டு போட போயிட்டு வந்துரலாம்.. சூப்பர் ஏற்பாடு! ஓ... இப்போ கூட்டம் குறைவா இருக்கே.. ஓட்டு போட போயிட்டு வந்துரலாம்.. சூப்பர் ஏற்பாடு!

    கோபியில் வாக்களிப்பு

    கோபியில் வாக்களிப்பு

    மக்கள் தாங்கள் விரும்பும் அரசு அமைவதற்காக காலை 7 மணி முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வாக்குபதிவு செய்தார்.

    சங்கரன்கோவிலில்

    சங்கரன்கோவிலில்

    இதேபோல் தென்காசி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி வாக்களித்தார். அவர் தனது வாக்கை சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆரம்பப் பாடசாலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் பதிவு செய்தார்.

    எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்

    எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்

    தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளி வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலையில் விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை உள்ளதால் நாங்கள் பணத்தை நம்பாமல் மக்களின் நம்பி உள்ளோம், ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தஞ்சை தொகுதியில் நான் வெற்றி பெறுவேன்" இவ்வாறு கூறினார்.

    கோவையில் வாக்கு

    கோவையில் வாக்கு

    பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட கோவை சுகுணாபுரத்தில் உள்ள வாக்கு மையத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது வாக்கைப் பதிவு செய்தார். தேர்தலில் வாக்களிப்பதற்காக காலை எட்டு மணிக்கு அமைச்சர் வேலுமணி வாக்கு சாவடி மையத்திற்கு சென்று கடமையை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது உள்ள இந்த வாக்கு பதிவு முறை எளிதாக உள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தியுள்ள யாருக்க வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெறும்" இவ்வாறு கூறினார்.

    English summary
    lok sabha elections 2019 : TN political leaders velumani, sengottaiyan, ss palanimanickam vote in his constituency
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X