ஆரோக்யா பால் பாக்கெட் விலை உயர்வு.. ஒரு பாக்கெட் எவ்ளோ பாருங்க.. இன்று முதல் தயிர் விலையும் ஏறியது
சென்னை: தமிழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இதையடுத்து, விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்து, முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறது.
தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. குறிப்பாக, தமிழகத்தில், ஆரோக்யா, திருமலா, நந்தினி, அமுல் ஆகிய பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, தினமும் சுமார் 18 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது... தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன...
ஆவின் பால்: இதில், ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக விற்பனையாகிறது.. இப்படிப்பட்ட சூழலில், தனியார் பால் விற்பனை விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவலை: மேலும், பால் சார்ந்த உணவுப் பொருள்கள் அனைத்தும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது, பொதுமக்களை அதிருப்திக்கும், கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த விலை உயர்வுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது..
- 1 லிட்டர் பாக்கெட் - 65 ரூபாயில் இருந்து 67 ரூபாயாக நிர்ணயம்
- நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி - 31 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக விற்பனை
- 1 லிட்டர் பாக்கெட் - 58 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக நிர்ணயம்
- தயிர் பாக்கெட் 400 கிராம் - 30 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக விற்பனை
- தயிர் பாக்கெட் 500 கிராம் - 37 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக விற்பனை
- 1 கிலோ தயிர் - 66 ரூபாயில் இருந்து 68 ரூபாயாக நிர்ணயம்
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் பால் முகவர்களுக்கு பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்துவதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆரோக்கியா நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளது.
கண்டனம்: இந்த நடவடிக்கை மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் அமைந்துள்ளது. எனவே இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது" என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications