"நீ விளையாடு நண்பா".. உதயநிதி ஸ்டாலின் போட்ட ஒற்றை போட்டோவுக்கு இப்படி பதில் போட்டது யாரு தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சமூக வலைதளங்களில் ஒற்றை போட்டோவை பதிவிட்டு பெரும் பிரளயத்தைக் கிளப்பிவிட்டார். இந்த ஜோரான ஆட்டத்தில் அமைச்சரவை சகாக்களும் சேர்ந்து கும்மியடிக்க தொடங்கிவிட்டனர்.
சனாதான ஒழிப்பு விவகாரத்தில் திமுகவை, டெங்கு- காலரா- மலேரியா என்றெல்லாம் பாஜகவினர் இடைவிடாமல் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனாலும் சனாதனம் ஒழிப்புதான் இலக்கு என்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உறுதியாக உள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு வழக்கம் போல தமிழ்நாட்டு அத்தனை தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு பாஜக மட்டும் எதிர்க்குரல் எழுப்பியது. திருச்சியில் இன்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா, போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.
இதனிடையே இன்று திடீரென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு போட்டோ பகிர்ந்தார். அதாவது கொசுக்களை அழிக்கக் கூடிய கொசுவர்த்தி சுருள் எரிந்து கொண்டிருக்கும் படம்தான் அது. அதற்கு எந்த கமெண்ட்டும் எழுதாமல் வெறும் படத்தை மட்டுமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் உதயநிதி ஸ்டாலினின் இந்த ஒற்றை போட்டோ படுவேகமாக ஹாட் டாப்பிக்கானது. சனாதானத்தை முன்வைத்தும் பாஜகவினரை விமர்சித்தும் ஒப்பிட்டும் ஏராளமான கருத்துகள் கொட்டிக் குவிகின்றன.

இந்த கோதாவில் தமிழ்நாடு அமைச்சர்களும் இணைந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது சமூக வலைதளப் பக்கங்களில் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டோ பக்கத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் "நீ விளையாடு நண்பா" என்ற கமெண்ட்டும் "பயர்" சிக்னலுடன் போட்டுவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர்கள் இருவரும் இன்று ஒன்று கூடி முடிவெடுத்தார்களோ என்னமோ? சோசியல் மீடியாவே அதகளப்படுதுங்க சாமீகளா!
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications