ராஜாஜி ஹாலில் மயங்கினேன்.. "தாத்தா" இறந்த போதும் மகேஷ் எங்கே என கேட்ட உதயநிதி.. அன்பில் சிலாகிப்பு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் மயங்கிய என்னை தேடி வந்து உதவி செய்தவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் அன்பில் மகேஷ் சிலாகித்து பேசினார்.
Recommended Video
அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், டிஆர் பாலு மகன் டிஆர்பி ராஜா, டாக்டர் எழிலன் உள்ளிட்டோர் சிறுவயது முதல் நண்பர்கள். இவர்கள் ஒன்று சேர்ந்தாலே அந்த இடத்தில் சிரிப்பும் கலாட்டாக்களும் களைகட்டும் என்பார்கள் அவருடன் இருப்பவர்கள்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்து கொண்ட போது உதயநிதி ஸ்டாலின் கைதட்டி ஆனந்த கண்ணீர் மல்க தனது நண்பனின் வளர்ச்சியை ரசித்தார்.

சட்டசபை
அது போல் சட்டசபையில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் பேசிய போது அவர் பக்கத்தில் வந்து அமர்ந்த அன்பில் மகேஷ் நண்பனின் கன்னிப் பேச்சை (சட்டசபையில் முதல்முறையாக உரை) கண்டு ரசித்தார். இப்படியாக இவர்களுக்குள் உணர்வுபூர்வமான நட்பு உள்ளது.

உதயநிதி
சேப்பாக்கம் தொகுதியில் நண்பன் உதயநிதியின் செயல்பாடுகளை பார்த்த அன்பில் மகேஷ் , தனது உதயநிதியின் சேவை ஒரு தொகுதியுடன் நின்றுவிடக் கூடாது, தமிழகம் முழுவதும் கிடைக்க வேண்டும் என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என திருச்சி திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றினார்.

சென்னை தினம்
இந்த நிலையில் சென்னை தினத்தையொட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த சென்னை மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் வருத்தத்தையும் கொடுத்துள்ளது. வருத்தம் என்னவென்றால் தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடைசியாக சிகிச்சை பெற்றது.

கருணாநிதி
பின்னர் அவர் காலமானது, இவையெல்லாம் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றன. அவரது உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி கிடைப்பதற்காக ராஜாஜி ஹாலில் அவரது உடலுடன் நீதிமன்ற தீர்ப்பிற்காக காத்திருந்த நிகழ்வும் எனக்கு வருத்தமளிக்கிறது. அப்போது கருணாநிதி மறைவால் மிகவும் மனவேதனை அடைந்து நான் மயங்கிவிட்டேன்.

மயங்கிய எனக்கு உதவிய உதயநிதி
அப்போது கூட தாத்தா இறந்திருக்கிறார் என்ற போதிலும் மகேஷ் எங்கே என கேட்ட உதயநிதி, மயங்கிய எனக்கு முதலுதவி கொடுத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி தலைவரின் உடல் அருகே அழைத்து சென்றார் என அன்பில் மகேஷ் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். உதயநிதி, கிருத்திகாவை காதலிப்பதையும் முதலில் தன்னிடம் சொல்லியதுடன் அந்த பெண்ணை பார்க்க கோயிலுக்கு தன்னை அழைத்துச் சென்றதாகவும் வேறு ஒரு பேட்டியில் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications