"தமிழகத்தில் பள்ளிகளை திறக்க.. இரு நாட்களில் வெளியாகிறது அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்!"
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில் பள்ளிகளை திறந்த பிறகு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பேசப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே பள்ளிகள் திறப்பு தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டது.

இன்று ஆலோசனை
அவற்றில் கூடுதல் அம்சங்களை சேர்ப்பது தொடர்பாக இன்று ஆலோசித்தோம். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாளில் வெளியாகும். முதலமைச்சர் கூறியுள்ளபடி 50 சதவீத மாணவர்களை கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். 40 மாணவர்கள் இருந்தால் ஒருநாளில் 20 மாணவர்கள் வரவழைக்கப்படுவர்.

இரு வேளைகள்
ஒரே நாளில் இரண்டு வேளைகளாக மாணவர்கள் வரவழைக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு வராத இடைப்பட்ட ஒருநாள் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி வழங்கப்படும்.

இஎம்ஐஎஸ் தளத்தில் விவரங்கள்
EMIS தளத்தில் மாணவர்களின் விவரங்கள் உள்ளன. தனியார் பள்ளியில் இருந்து 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். பெற்றோரின் மூலம் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனரா என்பது குறித்து குழந்தை தொழிலாளர் ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளித் திறப்பு
முதல்வரின் அறிவிப்பின்படி செப்டம்பர் 1 ல் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறையினர் தயாராக உள்ளோம். 14 மாநிலங்களில் பல்வேறு வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, அதை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.

முதல்வர், நிதியமைச்சர்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள 14 விலையில்லா பொருட்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். முதலமைச்சர் , நிதி அமைச்சருடன் ஆராய்ந்து மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் எவை எவை என தீர்மானிக்கப்படும். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

திமுகவின் கருத்தே நீட் விலக்குதான்
நீட் விலக்கு என்பதே திமுகவின் கருத்து, அதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். நவம்பர் 9 முதல் நீட் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. மாணவர்கள் குறைவாகவே நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை தரம் உயர்த்துவது தொடர்பாக பட்ஜெட் தாக்கலான பிறகு அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications