அமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..?
சென்னை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணன் மகனை நலம் விசாரிப்பதற்காக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அங்கு சென்றுள்ளார்.
முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் துறை சார்ந்த வளர்ச்சிப்பணிகளுக்காக எனக் கூறி கடந்த இரண்டு வார காலமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்றுவிட்டு நேற்று முன் தினம்தான் சென்னை திரும்பினார்.

விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பத், உள்ளிட்டோர் வெளிநாடுகளில் உள்ள நிலையில், அமைச்சர்கள் கே.சி.அன்பழகன், சி.வி.சண்முகம், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் புதிதாக நேற்று வெளிநாடுகளுக்கு பறந்துள்ளனர்.
அதில் சி.வி.சண்முகம் அரசுமுறை பயணமாக இல்லாமல் தனிப்பட்ட பயணமாக சென்றுள்ளாராம். அண்மையில் விபத்தில் படுகாயமடைந்த சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனுக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாம். இதனால் அண்ணன் மகனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக சி.விசண்முகம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இதேபோல் எகிப்து தலைநகர் கெய்ரோ சென்றுள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இதுவும் அரசுமுறை பயணம் இல்லை எனக் கூறப்படுகிறது.
குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணமாகவே அவரும் சென்றுள்ளாராம். இதனிடையே கடந்த மாதம் தாம் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மாஃபா பாண்டியராஜன் அரசுமுறை பயணமாக சென்று கலந்துகொண்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications