சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் தூத்துக்குடி போனது ஏன் - ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு சென்னையிலும், தூத்துக்குடியிலும் அனுமதி பெறாமல் சட்டத்தை மதிக்காமல் சென்றதற்கு விளக்கம் தர வேண்டும் என்றும்

இ பாஸ் விவகாரத்தில் அனைவரும் சமம் தான். யாருக்கும் விதிவிலக்கு அல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி கடந்த சனிக்கிழமையன்று மதியம் சென்னையிலிருந்து கிளம்பி மாலை சாத்தான்குளம் சென்றார். சாத்தான்குளத்தில் உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்திற்கு சென்று உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். நீதி கிடைக்க கழகம் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் அந்த புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

சென்னையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் திடீரென தூத்துக்குடி போனது எப்படி என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் சென்னையில் முழு ஊராடங்கு அமலில் உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று வந்திருக்கிறார். இது சட்டத்தை மீறிய செயல் என்றும் இதற்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் தரவேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

துக்க வீட்டுக்கு போறதுக்குகூட போஸ்டர் அடிக்கணுமா.. அதுவும் சாதியை சொல்லி.. மீண்டும் சிக்கலில் காங்.!துக்க வீட்டுக்கு போறதுக்குகூட போஸ்டர் அடிக்கணுமா.. அதுவும் சாதியை சொல்லி.. மீண்டும் சிக்கலில் காங்.!

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

சென்னை ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட தம்பு செட்டி தெரு பகுதியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், அப்பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் சகோதரன் திருநங்கைகள் அமைப்பினர் உடன் இணைந்து கொரோனாவிற்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டுக்கு குறைந்தது 4 முதல் 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் 40 ஆயிரம் பேருக்கு சளி, காய்ச்சல் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக கூறினார்.

கொரோனா இல்லாத மாநிலம்

கொரோனா இல்லாத மாநிலம்

ராயபுரம் மண்டலத்தில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தனி மனித இடைவெளி, முக்கவசம் அணிவது, அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லாமல் இருப்பது மூலம் கொரோனாவை கட்டுபடுத்தலாம். மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றலாம். மக்கள் தான் இறுதி எஜமானர்கள்.

5 நாட்கள் தனிமை

5 நாட்கள் தனிமை

சென்னையில் உள்ள 2 ஆயிரம் குடிசை பகுதிகளில் மைக்ரோ திட்ட அடிப்படையில் தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை மாத்திரைகள் மூலமாகவும், உணவு முறைகள் மூலமாகவும் அதிகரித்து கொள்ள வேண்டும். நமக்கு பிரச்சனை வரக்கூடாது, நம்மால் மற்றவருக்கு பிரச்சனை வரக்கூடாது என்ற எண்ணத்திலே 5 நாட்கள் நானாக என்னை தனிமைபடுத்திக் கொண்டேன். மேலும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியான பின்பு தான் வெளியில் வர ஆரம்பித்தேன்.

இ பாஸ் இல்லாத பயணம்

இ பாஸ் இல்லாத பயணம்

உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு சென்னையிலும், தூத்துக்குடியிலும் அனுமதி பெறாமல் சட்டத்தை மதிக்காமல் அவர் சென்றுள்ளார். இதற்கான விளக்கத்தை அவர் தர வேண்டும். இ பாஸ் விவகாரத்தில் அனைவரும் சமம் தான். யாருக்கும் விதிவிலக்கு அல்ல என்றும் தெரிவித்தார்.

ஆட்குறைப்பு விவகாரம்

ஆட்குறைப்பு விவகாரம்

முதல்வர், அமைச்சர்கள் மீதான ஸ்டாலினின் குற்றச்சாட்டு அவருடைய எண்ணத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஆட்கள் குறைப்பு என்பது மனிதாபிமானம் சார்ந்த செயலாக உள்ளது. நிறுவன உரிமையாளர்களின் மனிதாபிமானமற்ற செயலால் ஆட்கள் குறைப்பு நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார்.

English summary
Minister D Jayakumar talking about Udayanidhi stalin thoothukudi visit E Pass issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X