டெய்லி கொலை, கொள்ளை நடக்குது.. அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்.. திண்டுக்கல் சீனிவாசன் செம பதில்!
கொலை கொள்ளை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்
சென்னை: தமிழகத்தில் நடக்கிற கொலை, கொள்ளைக்கும் அதிமுக ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுவாக மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார் திண்டுக்கல் சீனிவாசன். எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார்.

வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கு சென்று விடுகிறது. இப்போதுகூட சென்னை விமான நிலையத்தில் ஒரு பேட்டி தந்துள்ளார். இதை அமைச்சர் தெரியாமல் சொல்கிறாரா, அல்லது விஷயம் தெரிந்துதான் சொல்கிறாரா என்று தெரியவில்லை.
நகைக்காக நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நேற்று கொலை செய்யப்பட்டார். அதனால், தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் கொலை, கொள்ளைகள் பற்றி செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், "பணத்துக்காக, நகைக்காக இப்படி கொலை, கொள்ளைகள் நடக்குது. இது எல்லா இடங்களிலும்தான் நடக்குது. டெய்லி பேப்பர்ல செய்தி வருது. டிவியிலயும் செய்தி வருது. இதுக்கு நாம என்ன செய்ய முடியும்?
எல்லா ஊரிலும், எல்லா நாட்களிலும் எல்லார் ஆட்சியிலும்தான் நடக்குது. இதையெல்லாம் அவங்கவங்களே பார்த்து திருத்திக்கிட்டாதான் உண்டு. கொலை, கொள்ளைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? இதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்?" என்றார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications