Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று "ஜெயலலிதா அம்மையார்" னு அழைத்த துரைமுருகன்! இன்று கவனிச்சீங்களா? முதல்வரும் உற்று பார்த்தாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மையார் என்றே அழைத்து வந்த அமைச்சர் துரைமுருகன் இன்று திடீரென வேறு பெயரில் அழைத்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் உற்று கவனித்தார்.

இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் ஊரை சொன்னால் ஆற்றின் பெயரை சொல்வேன், ஆற்றின் பெயரை சொன்னால் ஊரை சொல்வேன். அரசலாறா கும்பகோணம், அக்னியாறா பட்டுக்கோட்டைக்கு போ... அப்படினு எந்த ஊரை சொன்னாலும் ஆற்றின் பெயரை சொல்லும் அளவுக்கு இந்த துறையில் நான் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அப்படித்தான் எனக்கு கருணாநிதி பயிற்சி கொடுத்தார்.

Minister Durai murugan calls EX CM Jayalalitha as Amma

டெல்டாகாரர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான் நெல் சாகுபடி மட்டும்தான். தண்ணீர் இல்லாததால் மாற்று பயிரை போடமாட்டார்கள். அவர்கள் கூழ், களி, கம்பங்களி என செய்யமாட்டார்கள். அவர்களுக்கு அரிசிதான் வேண்டும். கேழ்வரகு, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை விளைவிக்க தெரியாது.

ஊடுபயிராக வேண்டுமானாலும் கொஞ்சம் உளுந்தை போடுவார்கள். இதை தவிர வேறு எதுவும் தெரியாது. எந்த தொழிற்சாலையும் கிடையாது. காலமெல்லாம் மண்ணோடு மண்ணாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக இந்த அரசாங்கம் போராடாமலா இருக்கும்?

நம்ம எதிர்க்கட்சித் தலைவர் கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுங்க அழுத்தம் கொடுங்கன்னு சொன்னார். அழுத்தம் கொடுத்தால் மட்டும் வேலை முடிந்துவிடும் என சொல்றீங்களா? இல்லை முடியாது, நான் சொல்றேன் பாருங்கள் உங்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் இடைக்கால் தீர்ப்பை கர்நாடகா அரசு கெஜட்டில் போடவில்லை. இதனால் அம்மா அவர்கள் உண்ணாவிரதம் உட்கார்ந்தார். உட்கார்ந்தார், உட்கார்ந்தார்.

உடனே பிரதமராக இருந்த நரசிம்மராவ் உத்தரவின் பேரில் ஒருவர் வந்து அம்மாவை பார்த்தார் போய்விட்டார், அதன்பிறகு சென்னா ரெட்டி வந்தார், சுக்லா வந்தார் . அப்போது என்னம்மா குறை என கேட்டனர். அதற்கு அம்மாவோ காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் போடவில்லை என்றார். நாங்கள் நடவடிக்கை எடுக்குறோம், குழு அமைக்கிறோம் என்றார்கள், ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.

அவ்வளவு பெரிய முதல்வர் உண்ணாவிரதம் இருந்து அழுத்தம் கொடுத்தே அசையலையே டெல்லி! என் அனுபவத்தில் சொல்கிறேன். ஒற்றுமை ஒன்றுதான் சாதிக்க முடியுமே தவிர! வேறு ஒன்றும் கிடையாது. பாஜக கோபித்துக் கொண்டு போய்விட்டார்கள். அரசியல் பார்க்க வேண்டும்தான்,. ஆனால் எல்லாவற்றிலும் அரசியல் பார்த்தால் நாம் மனிதர்களாக இருக்க முடியாது. எனவே அழுத்தம் கொடுத்தாலும் ஒன்றும் பலனில்லை, நாம் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார் துரைமுருகன். பொதுவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மையார் என்றும் ஜெயலலிதா அம்மையார் என்றும் திமுகவினரும் பிற கட்சியினரும் அழைப்பார்கள். அதிமுகவினர் மட்டுமே அம்மா என அழைப்பார்கள். ஆனால் இன்று துரைமுருகன் அம்மா என அழைத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் உற்று பார்த்தபடியே இருந்தார்.

காவிரி தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நீரை பெறுவதற்காக பல வழக்குகள் தொடுக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்கள். உச்சநீதிமன்றத் தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடுவதுதான் நியாயமானது. உச்சநீதிமன்ற தீர்ப்புபடி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற வார்த்தையை தீர்மானத்தில் இணைக்க வேண்டும். பயிர்கள் கருகிவிட்டது. அதற்கு யார் பொறுப்பு. திமுக எம்பிக்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றபோது நட்பின் அடிப்படையில் கேட்டிருக்கலாம். எங்களிடம் இருந்த துணிச்சல் ஏன் உங்களிடம் இல்லை.
தேசிய கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். அதிகமான அழுத்தத்தை கொடுத்தால்தான் தீர்வு கிடைக்கும் என சொல்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+