ஆயிரம் ஏக்கர் மாந்தோப்பு.. திமுக எம்எல்ஏவை பதற வைத்த துரைமுருகன்.. வெடித்துச் சிரித்த சட்டசபை!
சென்னை : சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு திடீரென அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் சொன்ன பதில் அவையை சிரிப்பலையில் ஆழ்த்தியது. திமுக எம்.எல்.ஏ மாதவரம் சுதர்சனத்திற்கு ஆயிரம் ஏக்கர் மாந்தோப்பு இருப்பதாக துரைமுருகன் கூறியதும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய மாதவரம் திமுக எம்.எல்.ஏ சுதர்சனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை செல்கின்றன. வடசென்னையில் மருந்துக்குக் கூட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவதில்லை. தற்போது தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹை டெக் சிட்டி வருவதாக அறிவித்துள்ளீர்கள். அதுவாவது மாதவரம் பகுதிக்கு கொண்டு வரப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பதில் : அதற்கு பதிலளித்துப் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஹை-டெக் சிட்டி சென்னை, கோவை, ஓசூரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நூறு ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்களை கண்டறிந்து டெக் சிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒசூரில் 500 ஏக்கரும், கோவையில் 250 ஏக்கர் இடமும் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகிறோம் அதில் ஒன்றுதான் மாதவரம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயிலுக்காக ஒதுக்கப்பட்ட காலி இடங்களை பரிசீலித்து வருகிறோம். அந்த இடம் கிடைத்தால் அங்கு ஹை-டெக் சிட்டி கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்." என பதில் அளித்தார்.
1000 ஏக்கர் மாந்தோப்பு : அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், "இது ஒரு முக்கியமான கேள்வி, மாதவரத்தில் ஐ.டி பார்க் வைக்க வேண்டியது முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கான நிலம் இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். மாதவரம் சுதர்சனம் என்னிடம் சொல்லி உள்ளார். அவருக்கு ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது என்று. அதில் 200 ஏக்கர் தருகிறேன் என்கிறார். அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனப் பேசினார்.
திடீரென குறுக்கிட்டு திமுக எம்.எல்.ஏவுக்கு ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்பு உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியதால், சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் பேசிய மாதவரம் சுதர்சனம், "மாதவரத்தில் பல்வேறு அரசுத் துறைக்கு சொந்தமான நிலங்கள் 400 ஏக்கருக்கு மேல் உள்ளது. மாதவரத்தில் மெட்ரோவும் உள்ளது. அடிப்படை வசதிகள் உள்ளதால் மாதவரத்தை தேர்வு செய்யவேண்டும்" எனக் கூறிவிட்டு, துரைமுருகன் கூறியது பற்றி எதுவும் பேசாமல் அமர்ந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications