Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணையை தூர் வாருவதாக சும்மா சொல்லிக்க வேண்டியது தான்! உலகின் எந்த நாட்டிலும் இது இல்லை! -துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அணையை தூர் வாருவதாக சும்மா சொல்லிக்க வேண்டியது தான், ஆனால் உலகின் எந்த நாட்டிலும் இது கிடையாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அணைகளில் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ள மணல்போக்கிகள் மூலம் ஆட்டோமெட்டிக்காக அங்கிருந்து மணல்கள் ஆற்றுக்கு சென்றுவிடும் என்ற தகவலையும் வெளியிட்டார்.

கிருஷ்ணகிரி அணை தூர்வாருவது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் இதனைத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அணை

கிருஷ்ணகிரி அணை

தமிழக சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி அணையை தூர் வாருவது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அணையை தூர் வாருவதாக சும்மா சொல்லிக்க வேண்டியது தான், ஆனால் உலகின் எந்த நாட்டிலும் இது கிடையாது எனக் கூறினார்.

 மணல் போக்கிகள்

மணல் போக்கிகள்

அணைகள் கட்டப்படும் போதே மணல் போக்கிகள் அங்கு வைக்கப்படும் என்றும் அந்த மணல் போக்கிகள் வழியாகத்தான் அணைகளில் இருந்து எவ்வளவு மண் வேண்டுமானாலும் வெளியேறி ஆற்றுக்குச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார். அணைகள் முழுவதையும் தூர்வார ஆரம்பித்தால், அந்த மண்ணை கொட்டுவதற்கு எங்கு போவது என்ற வினாவை எழுப்பிய அமைச்சர் துரைமுருகன் இயற்கையாகவே அணைகளில் இருந்து மண் வெளியேறிவிடும் எனக் கூறினார்.

தனி முயற்சி

தனி முயற்சி

இதனால் அணைகளில் இருந்து மண்ணை அள்ளுவதற்கான தனி முயற்சி தேவையில்லை என்றும் இது தான் சட்டரீதியாகவும் மெய்ஞனரீதியாகவும் பொதுப்பணித்துறையில் கண்டறியப்பட்ட உண்மை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். அணையில் தூர்வார முடியாது என்பது ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தெரிந்திருக்கும் என அவர்களை சுட்டிக்காட்டியும் அவர் பேசினார்.

அவ்வளவு அக்கறையா?

அவ்வளவு அக்கறையா?

இதனிடையே பதிலளிப்பதற்கு முன்னர் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ. அசோக் குமாரை நோக்கி, ''கிருஷ்ணகிரி அணை மீது அவ்வளவு அக்கறை இருந்தால், நீங்க தனிக் கேள்வி ஒன்றே கேட்டிருக்கலாம். அதைவிடுத்து யாரோ கேட்ட கேள்வியில் துணைக் கேள்வி கேட்கிறீர்கள், பரவாயில்லை உங்களுக்கு பதில் சொல்கிறேன்'' என தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் உறுப்பினரை கலாய்த்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+