சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதி கைதான போது! துடிதுடித்த வெங்கையா நாயுடு என்ன செய்தார் தெரியுமா? துரைமுருகன் ருசிகரத் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அறிவாலயத்திற்கு வந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு துடித்து போனார் என அமைச்சர் துரைமுருகன் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

Recommended Video

    சென்னை: கம்பீரமாய் நிற்கும் கலைஞர் சிலை... குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைப்பு!

    சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    ரூ 1.17 கோடி மதிப்பில் சுமார் 16 அடி உயரத்தில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

    கோலாகல கருணாநிதி சிலைத் திறப்பு விழா: ரஜினிகாந்த் உட்பட.. பங்கேற்ற விஐபிகள் யார் யார் தெரியுமா? கோலாகல கருணாநிதி சிலைத் திறப்பு விழா: ரஜினிகாந்த் உட்பட.. பங்கேற்ற விஐபிகள் யார் யார் தெரியுமா?

    கலைவாணர் அரங்கம்

    கலைவாணர் அரங்கம்

    இந்த சிலைத் திறப்பு விழாவின் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் வரவேற்று பேசினார. அப்போது அவர் இந்த சிலை எப்படி அமைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் எத்தகைய பாடுபட்டார் என்பது குறித்தெல்லாம் விவரித்தார்.

    காமராஜர் சிலை

    காமராஜர் சிலை

    அப்போது அவர் ஒரு ருசிகர தகவலை அளித்தார். அவர் கூறுகையில் ஜவஹர்லால் நேரு சிலையை திறந்து வைத்தார் காமராஜர் , பெரியார் சிலையை திறந்து வைத்தது கருணாநிதி, அண்ணா சிலையை திறந்து வைத்தது நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராமசாமி, தற்போது அந்த வரிசையில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தவர் வெங்கையா நாயுடு.

    அண்ணா சாலை

    அண்ணா சாலை

    இதன் மூலம் இந்த சிலை இருக்கும் வரை உங்கள் பெயர் (வெங்கையா நாயுடு) அண்ணா சாலையில் இருக்கும். வெங்கையா நாயுடு சென்னைக்கு வேண்டியவர். நானும் டிஆர் பாலுவும் வெங்கையாவுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றோம். நான் கேட்டேன் , நீங்கள் நீண்ட நாட்களாக டெல்லியில் இருக்கிறீர்கள். யாரை பார்த்தாலும் அங்க ஒரு கோர்ட், இங்க ஒரு கோர்ட்டுனு மாட்டிக்கிறாங்க.

    வேட்டி சேலை

    வேட்டி சேலை

    நீங்கள் மட்டும் எந்த காலநிலையிலும் வேட்டி, சட்டையை அணிந்திருக்கிறீர்களே எப்படி என கேட்டேன். அதற்கு அவர் அதுதான் எனக்கு பிடிக்கும் என்றார். பார்லிமென்ட்டில் இருவர் மட்டுமே வேட்டி சட்டையை கட்டுவார்கள், ஒருவர் வெங்கையா நாயுடு, இன்னொரு ப சிதம்பரம். அதிலும் வெங்கையா ஆந்திராகாரராக இருந்தாலும் தமிழர்களை போலவே வேட்டியை கட்டுவார். எனவே வெங்கையா அவர்களே நீங்கள் எங்கள் ஊர்காரர்.

    கோட்டூர்புரம்

    கோட்டூர்புரம்

    இன்னும் சொல்ல போனால் கோட்டூர்புரத்தில் எனது எதிர்வீட்டுக்காரர். இந்த மண்ணோடு வாசனையோடு கலந்து வந்தீர்கள். எங்கள் தலைவர் கருணாநிதியை கைது செய்த போது நீங்கள் அறிவகத்திற்கு வந்தீர்கள். அப்போது அங்கு பேராசிரியர் க அன்பழகன் இருந்தார். அப்போது நீங்கள் மத்திய அமைச்சர். நீங்கள் பட்டபாட்டை நான் நேரில் இருந்து பார்த்தேன். பிரதமர் வாஜ்பாய்க்கு போன் போட்டு துடிக்கிறார். அந்த துடிப்புதான் போன் இன்று கருணாநிதியின் சிலை திறக்கும் அளவுக்கு வந்தது என துரைமுருகன் நெகிழ்ந்து போனார்.

    English summary
    Minister Duraimurugan says interesting facts about Vice President of India Venkaiah Naidu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X