“அந்த மாதிரி கவர்னர் இல்ல”.. மறைமுகமாக கிண்டல் செய்த துரைமுருகன்.. டக்கென சிரித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக கிண்டல் செய்தார் அமைச்சர் துரைமுருகன். துரைமுருகனின் கிண்டலை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ரசித்துச் சிரித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை வெளியிட்டார். மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் பேசிய திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், "மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருந்தபோது, எந்த மசோதாவிலும் கையெழுத்து போடாமல் அல்லது தன்னிடம் வைத்திருக்காமல், மசோதா வந்த உடனே கையெழுத்து போட்டு, உடனே அரசுக்கு அனுப்பி, சர்க்காருக்கு எந்த தலைவலியும் ஏற்படுத்தாமல் இருந்த மரியாதைக்குரிய சிறப்பு விருந்தினர் கோபால கிருஷ்ண காந்தி அவர்களே" என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசியதைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் சிரித்தபடி கைதட்டினர். முதலமைச்சர் ஸ்டாலினும் குறுநகையோடு துரைமுருகனின் பேச்சை ரசித்தார்.
தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், "சாதாரண கிராமத்தில் பிறந்த எங்களைப் போன்றோரை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. எங்களை அமைச்சராக்கி பெரும் அந்தஸ்து கொடுத்தார். அதை அப்போது நாங்கள் பெருமையாக கருதினோம். ஆனால் அதைவிட இப்போது பெருமையாக நினைப்பது அவரது நூற்றாண்டு விழாவில் பங்கேற்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுதான்.
எந்தக் காலத்திலும் அழிக்க முடியாத பல்வேறு சாதனைகளை செய்தவர் கருணாநிதி. அவருக்கு தான் நூற்றாண்டு விழா எடுத்திருக்கிறோம். எத்தனையோ செத்துப்போன மொழிகளுக்கு இன்று சீர் செய்யப்படுகிறது. ஆனால் பன்னெடுங்காலமாக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று எத்தனையோ பேர் கேட்டனர். காலம் கடந்ததே தவிர யாரும் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்மொழிக்கு எத்தனையோ தடங்கல்களை தாண்டி செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் கருணாநிதி.
தமிழ் மொழி உள்ளவரை கருணாநிதியின் பெயர் நிலைத்திருக்கும். பலரது பெயர்கள் அடிபட்டு போகும், ஆனால் கருணாநிதி பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அகில இந்திய அளவில் தலைவராக இருந்தவர் கருணாநிதி. கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவாரே கிங் மேக்கராக இருந்து பலரையும் பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் ஆக்கியவர் கருணாநிதி.

தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைவர் அல்ல. அகில இந்திய அளவிலும் தலைவராக இருந்தார். அவர் கிங் மேக்கராக இருந்து வாஜ்பாய், சரண் சிங், விபி சிங் ஆகியோரை பிரதமராக்கினார். சஞ்சீவ் ரெட்டி போன்றோரை கோபாலபுரத்தில் இருந்தபடியே குடியரசு தலைவராக்கினார். அவரிடம் ஒருமுறை நீங்கள் பிரதமர் ஆகலாமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,'என் உயரம் எனக்கு தெரியும், என் மாநில மக்கள் தான் எனக்கு முக்கியம்' என்று கூறியவர் கருணாநிதி.
மு.க.ஸ்டாலின் இல்லாமல் வேறு யாரும் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருந்தால் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில் அவருக்கு சின்ன விளம்பரம் கூட கிடைத்திருக்காது. ஆனால் காலம் சரியாக யாரை கொண்டுவர வேண்டும் என தீர்மானித்து தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டுவந்துள்ளது" எனத் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்.
-
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.. மகளிருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications