பல்லாவரம்-குன்றத்தூர் 4 வழி சாலை.. சென்னை புறநகர் மக்களுக்கு பிறக்க போகும் விடியல்.. குட் நியூஸ்
சென்னை: சென்னையை அடுத்த குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் பல ஆண்டுகளாக அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை அகலப்படுத்தினால் பூந்தமல்லிக்கும் வட சென்னை பகுதிக்கும் எளிதாக போய்விடலாம். இதேபோல் ஓஎம்ஆர்சாலைக்கும் எளிதாக போக முடியும். இந்த சாலைக்கு விரைவில் விடிவு காலம் வரப்போகிறது. பல்லாவரம்-குன்றத்தூர் சாலை 4 வழி சாலை குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.
சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை, குன்றத்தூர், போரூர். பூந்தமல்லியை இணைக்கும் சாலை என்றால் அது பல்லாவரம் குன்றத்தூர் சாலை தான். இந்த சாலை பல ஆண்டுகளாக அகலப்படுத்தப்படாமல் உள்ளது. இரு வழிச்சாலையாக மட்டுமே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் இந்த பகுதியில் தினமும் ஏற்படுகிறது. பல்லாவரம் குன்றத்தூர் சாலை அகலப்படுத்தப்பட்டால், திருவள்ளுர் மற்றும் பூந்தமல்லியில் இருந்து கூட எளிதாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு வர முடியும். தாம்பரம் பகுதியில் இருந்து எளிதாக போரூர், குன்றத்தூருக்கும், வெளிவட்ட சாலைக்கு மக்களால் போக முடியும்.

பல்லாவரம் குன்றத்தூர் சாலை
அதேபோல் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள அனைத்து பகுதி மக்களும் எளிதாக தாம்பரம், பல்லாவரத்தை ஜிஎஸ்டி சாலை வழியாக அடைய முடியும். சென்னை புறநகர் பகுதி மக்களின் முக்கியமான பல்லாவரம் குன்றத்தூர் சாலை சிறிதாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பல கிலோ மீட்டர் நீளம் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால் சாலை முழுமையாக ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, நில எடுப்பு செய்து ஆக்கிரமிப்பை அகற்றினால் தான் தீர்வு கிடைக்கும்.
எவ வேலு ஆய்வு
இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பல்லாவரம், குரோம்பேட்டை, திருநீர்மலை சாலை, பம்மல், குன்றத்தூர் பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி கமிஷ்னர் பாலசந்தர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.
நெடுஞ்சாலை துறை திட்டம்
பின்னர் செய்தியாளர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், "சென்னையை அடுத்த குன்றத்தூரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் குன்றத்தூர்-பல்லாவரம் சாலையைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த சாலையை 4 வழி சாலையாக அமைக்கலாம் என நெடுஞ்சாலைத் துறை சார்பில் திட்டமிடப்பட்டது. அதாவது, பூந்தமல்லி - குன்றத்தூர் - பல்லாவரம் சாலையை அகலப்படுத்த 2014ம் ஆண்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, நிலஎடுப்புப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை..
கலெக்டருக்கு உத்தரவு
தற்போது மாவட்ட கலெக்டரிடம் சாலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றும் நில எடுப்பு இருந்தால் அதற்கும் ஆய்வுகள் செய்து, துறையின் சார்பாக பணம் ஒதுக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என சொல்லி இருக்கிறேன். எனவே நில எடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணி முடிவடைந்து விட்டால் இந்த நிதி ஆண்டிலேயே குன்றத்தூர்-பல்லாவரம் சாலை, 4 வழி சாலையாக அமைக்கப்படும் என்று கூறினார்,
24மீ அகலம் தேவையென முடிவு
தற்போது பல்லாவரம் குன்றத்தூர் சாலை சில இடங்களில் 2 வழிச்சாலையின் அகலம் 9 மீட்டராகவும், சில இடங்களில் 10 மீட்டராகவும் இருக்கிறது. இச்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகம் என்பதால் 24மீ அகலம் தேவையென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலஎடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி - குன்றத்தூர் - பல்லாவரம் சாலையின் 7 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இதுதவிர ஈசா பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநாகேஸ்வரம், மனஞ்சேரி மற்றும் குன்றத்தூர் பி பகுதி ஆகிய கிராமங்களில் நிலஎடுப்புப் பணி பல்வேறு கட்டங்களில் நடந்து வருகிறது.
ஜிஎஸ்டி சாலை
இது பற்றி அமைச்சர் எவ வேலு வெளியிட்ட பதிவில், பூந்தமல்லி - குன்றத்தூர் - பல்லாவரம் சாலை (SH113A) அகலப்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. பூந்தமல்லி - குன்றத்தூர் - பல்லாவரம் சாலை GST சாலையில் தொடங்கி கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் இணைகிறது. இச்சாலை சென்னை மற்றும் புறநகரில் உள்ள சாலைகளில் ஒரு முக்கியமான சாலையாகும்.
போக்குவரத்து அதிகம்
இச்சாலை பல்லாவரம் பம்மல் பொழிச்சலூர் அனகாபுத்தூர் குன்றத்தூர் ஆகிய முக்கிய இடங்களையும் மற்றும் GST சாலை, சென்னை புறவழிச்சாலை, வெளிவட்டச்சாலை ஆகிய சாலைகளை இச்சாலை இணைப்பதினால், போக்குவரத்து செறிவு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. பூந்தமல்லி - குன்றத்தூர் பல்லாவரம் சாலை சென்னையில் ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாகும்.
4 கிமீ தூரம் நெரிசல்
மேலும் இச்சாலை நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. அனகபுத்தூர் புறவழிச்சாலையிலிருந்து பல்லாவரம் MARS ஹோட்டல் வரை, குறிப்பாக உச்ச நேரங்களில், வாகனங்கள் 4.0 கி.மீ தூரம் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சாலை அகலம் எவ்வளவு
தற்போதைய குன்றத்தூருக்கு உள்ள இரண்டு வழிச் சாலை யின் அகலம் 9.0 மீ முதல் 10 மீ வரை வேறுபடுகிறது. தற்போதைய PCU 58422 மற்றும் எதிரவரும் வாகன போக்குவரத்தை(PCU 1,00,000) ஈடுகட்டவும், மேலும் வரவிருக்கிற CMDA Master Plan III-யும் கருத்தில் கொண்டு, 24.0 மீ அகலம் தேவையென முடிவெடுத்து நில எடுப்புப்பணிகள் அரசாணை எண். 108/நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் (HF-2) தேதி: 12.09.2014 இல் பிறப்பிக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் சாலை நிலம்
எனவே, பூந்தமல்லி - குன்றத்தூர் - பல்லாவரம் சாலையின் 6.8 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்துதல், பின்வரும் ஆறு கிராமங்களில் ஈசா பல்லாவரம், பம்மல் , அனகபுத்தூர், திருநாகேஸ்வரம், மனஞ்சேரி மற்றும் குன்றத்தூர் B பகுதி, ஆகிய கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் எவ வேலு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications